ரொம்ப காஸ்ட்லி வில்லனா இருக்காரேப்பா... பிரபாஸுக்கு வில்லனா நடிக்க ரூ.150 கோடி சம்பளம் கேட்ட கமல்ஹாசன்?
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் கமல்ஹாசன் ரூ.150 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கமல்ஹாசன். புது புது தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் கமலையே சேரும். அப்படிப்பட்ட மாபெரும் கலைஞனாக விளங்கி வரும் கமல்ஹாசனுக்கு கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு வரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதையடுத்து விக்ரம் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் மூலம் கெத்தாக ரீ-எண்ட்ரி கொடுத்தார் கமல்ஹாசன்.
விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசனின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அப்படத்துக்கு பின்னர் தன் சம்பளத்தை ரூ.100 கோடிக்கு மேல் உயர்த்திவிட்டார் கமல். தற்போது ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
இதையும் படியுங்கள்... படம் பார்க்காமலேயே விமர்சிப்பதா... கமல்ஹாசனை வெளுத்துவாங்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குனர்
இதுதவிர பா.இரஞ்சித், வெற்றிமாறன், எச்.வினோத் என ஏராளமான இயக்குனர் கமலுக்கு கதை சொல்லி கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு டோலிவுட்டில் இருந்து பிரம்மாண்ட வாய்ப்பு தேடி வந்துள்ளது. டோலிவுட்டில் தற்போது பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் புராஜெக்ட் கே. நாக் அஸ்வின் இயக்கிவரும் இப்படத்தில் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
புராஜெக்ட் கே படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க, நடிகர் கமல்ஹாசனை அணுகி உள்ளதாம் படக்குழு. கமலுக்கு கதை பிடித்துப்போக, அதில் அவர் நடிக்க கேட்ட சம்பளம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. அதன்படி புராஜெக்ட் கே படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க ரூ.150 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம் கமல். இதன்மூலம் காஸ்ட்லி வில்லனாக உருவெடுத்துள்ளார் கமல்.
இதையும் படியுங்கள்... நண்பர் ரஜினிக்காக களமிறங்கும் கமல்... லோகேஷ் கனகராஜ் - சூப்பர்ஸ்டார் இணையும் படத்தில் திடீர் டுவிஸ்ட்