கீர்த்திக்கு டஃப் கொடுக்கப் போகும் அடுத்த வாரிசு நடிகை... மகளை களமிறக்கும் கமல் பட நடிகை...!
உலகநாயகன் கமல்ஹாசன் பட நடிகை தற்போது திரையுலகில் தன்னுடைய மகளை களமிறக்க உள்ளார். இவர் நடிக்க போகும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் மலையாள படத்தின் ரீமேக்காக நடித்த ‘பாபநாசம்’ மற்றும் ‘தூங்காவனம்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ஆஷா ஷரத்.
மலையாள திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் ஆஷா தற்போது தன்னுடைய மகளையும் திரையுலகில் அறிமுகப்படுத்த உள்ளார்.
ஆஷா சரத் நடிக்கவிருக்கும் ஒரு படத்தில் அவரது மகளும் அறிமுகமாகவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
துபாயில் எஞ்சினியரிங் படிப்பை முடித்த ஆஷா சரத் மகள் உத்தரா, மனோஜ் கனா இயக்கும் ’கெட்டா’ என்ற படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் ஆஷா சரத் மற்றும் உத்தரா ஆகிய இருவரும் அம்மா மகள் கேரக்டர்களில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
’கெட்டா’ இயக்குனர் மனோஜ் ஒருநாள் தற்செயலாக தனது மகளை பார்த்ததாகவும், அப்போது நடிக்க விருப்பமா? என கேட்டபோது தனது மகள் உத்தரா மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டதாகவும் ஆஷா சரத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பிரபல நடிகை மோகனாவின் மகள் கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் அவருக்கு இவர் டஃப் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
திரையுலகிற்கு, புதுவராவாக வரவுள்ள உத்ரா சரத்துக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் உத்ரா நடிகையானதும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இணைந்து, புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.