ஜி.வி.பிரகாஷுக்கு வலைவீசும் கமல் - எந்த படத்திற்காக தெரியுமா?
G.V Prakash : பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரை தனது அடுத்த படத்தில் இசையமைக்க உலக நாயகன் கமல் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
GV Prakash kumar
கடந்த 2006ம் ஆண்டு தமிழில் வெளியான "வெயில்" என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் ஜி.வி பிரகாஷ். தொடர்ச்சியாக "ஓரம் போ", "கிரீடம்", "பொல்லாதவன்" உள்ளிட்ட திரைப்படங்கள் ஜிவி பிரகாஷுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. அவருடைய இந்த 18 ஆண்டுகால திரை பயணத்தில் 90க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.
9 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம்; டாக்டர் SJ சூர்யா தந்த "கில்லர்" அப்டேட்!
Music Director GV Prakash
விரைவில் சுதா கொங்கார இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள "புறநானூறு" திரைப்படம் தான் அவருடைய நூறாவது திரைப்படமாக மாற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 2024ம் ஆண்டை பொறுத்தவரை ஏற்கனவே "கேப்டன் மில்லர்" தொடங்கி "மிஷின்", "சைரன்", "ரெபல்", "கல்வன்", "டியர்" "தங்கலான்" மற்றும் "அமரன்" உள்ளிட்ட திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Amaran
மேலும் இந்த ஆண்டு அவருடைய இசையில் இன்னும் இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் தொடர்ச்சியாக நல்ல பல படங்களுக்கு இசையமைத்து வரும் ஜி.வி பிரகாஷ் குமார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த திரைப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் திரையரங்குகளில் மட்டும் சுமார் 320 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்திருக்கிறது.
KH 237
இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள சில தகவலின்படி அமரன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் அப்படத்தின் இசைக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கமலஹாசன் தனது அடுத்த படத்தை ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக பயன்படுத்த ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கமல் நடிப்பில், சண்டை பயிற்சியாளர்கள் அன்பு மற்றும் அறிவு இயக்கத்தில் உருவாகவுள்ள கமலஹாசனின் 237வது திரைப்படத்திற்கு தான் ஜிவி பிரகாஷ் இசையமைக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு துவக்கத்தில் இப்படத்திற்கான பணிகள் துவங்க உள்ளது. தற்பொழுது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் Thug Life திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள நிலையில், தன்னுடைய அடுத்த திரைப்படமாக அன்பு அறிவு திரைப்படத்தில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கங்குவா சாதனையை தவிடுபொடியாக்கும் புஷ்பா 2 - வெளியான தகவல் உண்மையா?