MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அனிருத் - காவ்யா மாறன் கல்யாணம்... அழைப்பிதழ் உடன் முதல்வர் வீட்டுக்கு விசிட் அடித்த கலாநிதி மாறன்!

அனிருத் - காவ்யா மாறன் கல்யாணம்... அழைப்பிதழ் உடன் முதல்வர் வீட்டுக்கு விசிட் அடித்த கலாநிதி மாறன்!

Anirudh - Kavya Maran Wedding : இசையமைப்பாளர் அனிருத்துக்கும், கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான அழைப்பிதழை முதல்வரிடம் கொடுத்துள்ளார் கலாநிதி மாறன்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 17 2026, 08:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Anirudh   Kavya Maran Wedding
Image Credit : X

Anirudh - Kavya Maran Wedding

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். இவருக்கும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரியுமான காவ்யா மாறனுக்கும் இடையே காதல் இருப்பதாகக் கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தன. இந்த நிலையில், இவர்களது திருமண தேதி, நடைபெறும் இடம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி குறித்த புதிய தகவல்கள் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நவம்பர் 11-ல் கிரீஸில் திருமணம்
Image Credit : Asianet News

நவம்பர் 11-ல் கிரீஸில் திருமணம்

வெளியாகியுள்ள தகவல்களின்படி, அனிருத் - காவ்யா மாறன் திருமணம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி ஐரோப்பிய நாடான கிரீஸில் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இவர்களது திருமணத்தை செஷல்ஸ் தீவில் நடத்துவதற்கான திட்டம் இருந்ததாகவும், பின்னர் இயற்கை எழில் சூழ்ந்த கிரீஸ் நாட்டைத் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடற்கரை மற்றும் அழகிய சுற்றுலாத் தலங்களுக்குப் பெயர்பெற்ற கிரீஸில், இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமண நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

35
விருந்தினர்களுக்காக 4 தனி விமானங்களா?
Image Credit : X

விருந்தினர்களுக்காக 4 தனி விமானங்களா?

இந்தத் திருமணத்தில் திரையுலகம், தொழில்துறை மற்றும் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த குறிப்பிட்ட சில முக்கியப் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ள சிறப்பு விருந்தினர்களை கிரீஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக நான்கு தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

இதற்கிடையில், திருமண ஏற்பாடுகளைக் கருத்தில்கொண்டு நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கு அனிருத் தனது இசை நிகழ்ச்சிகள் மற்றும் இசையமைப்புப் பணிகளில் இருந்து தற்காலிக இடைவெளி எடுத்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

45
நவம்பர் 21-ல் சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு
Image Credit : Instagram

நவம்பர் 21-ல் சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு

கிரீஸில் திருமணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும், சென்னையில் மிகப் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இரு குடும்பத்தினரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற இருப்பதாகச் சொல்லப்படும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை வழங்கும் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

55
தெலுங்கானா முதல்வருக்கு அழைப்பு
Image Credit : X

தெலுங்கானா முதல்வருக்கு அழைப்பு

இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகியுள்ளது. சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோர் ஹைதராபாத் சென்று, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். அப்போது, நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

இசையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் அனிருத்தும், ஐபிஎல் போட்டிகளின் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான காவ்யா மாறனும் திருமண பந்தத்தில் இணையப்போகும் தகவல் கவனம் பெற்றுள்ளன. இருப்பினும், திருமணம் தொடர்பாகப் பரவி வரும் இந்தத் தகவல்களை அனிருத் அல்லது காவ்யா மாறன் இருவருமே உறுதிப்படுத்தாமல் அமைதிகாத்து வருகின்றனர். சமீபத்தில் இருவரும் ஜோடியாக ஜெயிலர் 2 படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனிருத் ரவிச்சந்தர்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2 Day 2 Box Office : பாக்ஸ் ஆபிஸில் டபுள் செஞ்சுரி அடித்த ஜெயிலர் 2... இரண்டாம் நாள் வசூல் இத்தனை கோடியா?
Recommended image2
Ranabaali Review : ஜெயிலர் 2-வை விட மிரட்டலாக உள்ளதா ரணபாலி? முழு விமர்சனம் இதோ
Recommended image3
Anirudh : மாஸ் இசைக்கு நடுவே அனிருத் நிகழ்த்திய மெலடி மேஜிக்... காதலில் உருக வைத்த ராக்ஸ்டாரின் டாப் 10 மெலடி ஹிட்ஸ்!
Related Stories
Recommended image1
Jailer 2 : வெற்றியில் அனிருத் - காவ்யா... ரோகிணியில் தனுஷ் - ஐஸ்வர்யா! ஜோடியாக ஜெயிலர் 2 பார்த்த பிரபலங்கள்
Recommended image2
Anirudh : மாஸ் இசைக்கு நடுவே அனிருத் நிகழ்த்திய மெலடி மேஜிக்... காதலில் உருக வைத்த ராக்ஸ்டாரின் டாப் 10 மெலடி ஹிட்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved