MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jailer 2 : வெற்றியில் அனிருத் - காவ்யா... ரோகிணியில் தனுஷ் - ஐஸ்வர்யா! ஜோடியாக ஜெயிலர் 2 பார்த்த பிரபலங்கள்

Jailer 2 : வெற்றியில் அனிருத் - காவ்யா... ரோகிணியில் தனுஷ் - ஐஸ்வர்யா! ஜோடியாக ஜெயிலர் 2 பார்த்த பிரபலங்கள்

Jailer 2 FDFS : ஜெயிலர் 2 படத்தின் முதல் காட்சியை அனிருத்தும், காவ்யா மாறனும் ஒரே தியேட்டரில் பார்த்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 15 2026, 10:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jailer 2 FDFS
Image Credit : X

Jailer 2 FDFS

'தலைவர்'னு அன்பா அழைக்கப்படுற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இருக்கிற ரசிகர் பட்டாளமே தனி ரகம் தான். எல்லாரும் ஆவலா காத்துட்டு இருந்த 'ஜெயிலர் 2' படம் இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்கு. இதனால நாடு முழுக்க, குறிப்பா தமிழ்நாட்டில் இருக்கிற ரசிகர்கள் பயங்கர உற்சாகத்துல இருக்காங்க. விடியற்காலையிலேயே தியேட்டர்கள்ல குவிஞ்ச ரசிகர்கள், ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க பட்டாசு வெடிச்சும், சிறப்பு பூஜைகள் செஞ்சும் படத்தோட ரிலீஸை ஒரு பெரிய திருவிழா மாதிரி கொண்டாடிட்டு வராங்க. மதுரை திருப்பரங்குன்றத்துல இருக்கிற ஸ்ரீ வெயில் உகந்த அம்மன் கோவில்ல, 'ஜெயிலர் 2' படம் பெரிய ஹிட் ஆகணும்னு வேண்டிட்டு சில ரசிகர்கள் அங்கப்பிரதட்சணம் கூட செஞ்சிருக்காங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஒரே தியேட்டரில் தனுஷ் - ஐஸ்வர்யா
Image Credit : X

ஒரே தியேட்டரில் தனுஷ் - ஐஸ்வர்யா

ஜெயிலர் 2 படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினிகாந்தின் ஃபேமிலியும் ஒன்றாக பார்த்து ரசித்துள்ளனர். ஜெயிலர் 2 படத்தின் பர்ஸ்ட் ஷோ சென்னையில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. அதனைக் காண ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, அவரின் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு வந்திருந்தனர். அவர்களுடன் நடிகர் தனுஷும் ஜெயிலர் 2 படத்தின் முதல் காட்சியை கண்டு ரசித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

34
ஜோடியாக படம் பார்த்த அனிருத் - காவ்யா மாறன்
Image Credit : X

ஜோடியாக படம் பார்த்த அனிருத் - காவ்யா மாறன்

அதேபோல் சென்னையில் உள்ள புகழ்பெற்ற தியேட்டர்களில் ஒன்றான வெற்றி தியேட்டரிலும் திரைப்பிரபலங்கள் குவிந்துள்ளனர். குறிப்பாக ஜெயிலர் 2 படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் வெற்றி திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த சில நிமிடங்களில் இசையமைப்பாளர் அனிருத்தும் அங்கு வருகை தந்தார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் ஏற்கனவே உலா வந்த நிலையில், தற்போது இருவரும் ஜோடியாக ஒரே தியேட்டரில் ஜெயிலர் 2 படம் பார்க்க வந்துள்ளதால் காதல் சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது.

44
ஜெயிலர் 2 கொண்டாட்டம்
Image Credit : X

ஜெயிலர் 2 கொண்டாட்டம்

படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முந்தின நாள், ரஜினியோட பொண்ணும் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், சென்னையில ஒரு பிரம்மாண்டமான எல்.இ.டி பேனரை திறந்து வெச்சாங்க. சென்னை காசி தியேட்டர்ல நடந்த இந்த பேனர் திறப்பு விழாவுல சிறப்பு விருந்தினரா சௌந்தர்யா கலந்துக்கிட்டாங்க. அப்போ, முதல் பாகமான 'ஜெயிலர்' படத்தோட பாட்டுக்கு ரசிகர்களோட சேர்ந்து அவங்களும் டான்ஸ் ஆடுனாங்க.

சன் பிக்சர்ஸ் தயாரிப்புல, நெல்சன் திலீப்குமார் இயக்கத்துல 'ஜெயிலர் 2' உருவாகியிருக்கு. முதல் பாகம் பெரிய ஹிட் அடிச்சதால, இந்த படத்து மேல ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கு. இந்த ரெண்டாவது பாகத்துல நடிகை வித்யா பாலன் ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. படத்தோட ட்ரெய்லர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ரிலீஸ் ஆச்சு. அதுல, ரஜினிகாந்தோட 'முத்துவேல் பாண்டியன்' கேரக்டர் ரொம்ப அமைதியான வாழ்க்கையை வாழ்ற மாதிரியும், ஆனா அவரோட கடந்த கால சம்பவங்கள் மறுபடியும் அவரை வன்முறை உலகத்துக்கு இழுத்துட்டு போற மாதிரியும் காட்டியிருந்தாங்க. இந்த படத்துல மிதுன் சக்கரவர்த்தி, ஜாக்கி ஷெராஃப், மோகன்லால் ஆகியோரும் நடிச்சிருக்காங்க. அனிருத் ரவிச்சந்தர் படத்துக்கு இசையமைச்சிருக்கார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜெயிலர் 2
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2 Full Movie Review : ரஜினி பந்தயம் அடித்தாரா? பல்பு வாங்கினாரா? ஜெயிலர் 2 விமர்சனம் இதோ
Recommended image2
Jailer 2 Review : ஜெயிலர் 2 அலப்பறை கிளப்பியதா? அடிவாங்கியதா? முதல் பாதி விமர்சனம்
Recommended image3
பிக் பாஸ் வீட்டில் அனல்பறக்கும் டாஸ்க்... டைமண்ட் பாக்ஸை திறந்த கரிஷ்மா; அவினாஷிடம் பொங்கிய ஜேசன்.. என்ன நடந்தது?
Related Stories
Recommended image1
Jailer 2 Review : ஜெயிலர் 2 அலப்பறை கிளப்பியதா? அடிவாங்கியதா? முதல் பாதி விமர்சனம்
Recommended image2
Jailer 2 Full Movie Review : ரஜினி பந்தயம் அடித்தாரா? பல்பு வாங்கினாரா? ஜெயிலர் 2 விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved