MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினி முன் தயாரிப்பாளரிடம் டீல் பேசி.. தந்தைக்கு தனுஷ் மகன் வாங்கித்தந்த தரமான வாய்ப்பு - அதுவும் இந்த படமா?

ரஜினி முன் தயாரிப்பாளரிடம் டீல் பேசி.. தந்தைக்கு தனுஷ் மகன் வாங்கித்தந்த தரமான வாய்ப்பு - அதுவும் இந்த படமா?

நடிகர் தனுஷின் மகன் லிங்கா, அவரது தந்தைக்காக பிரபல தயாரிப்பாளரிடம் பேசி பட வாய்ப்பை பெற்றுத்தந்துள்ள சம்பவம் பற்றி தெரியவந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 25 2023, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் கலைப்புலி எஸ் தாணு. இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அதன்படி காக்க காக்க, துப்பாக்கி, அசுரன், கபாலி என இவர் தயாரித்த வெற்றிப்படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. அடுத்ததாக இவர் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்கிற படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்நிலையில், தயாரிப்பாளர் தாணு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார். அது என்னவென்றால் நடிகர் தனுஷின் மகனான லிங்கா தன்னிடம் பேசி அவரது தந்தைக்கு பட வாய்ப்பை பெற்றுக்கொடுத்த சுவாரஸ்ய சம்பவம் பற்றி அந்த பேட்டியில் தாணு கூறி உள்ளார். அதன்படி ஒருநாள் ரஜினியை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றிருந்தாராம் தாணு.

34

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தனுஷின் மூத்த மகன் லிங்கா, தாணுவை பார்த்து எப்பவும் என் தாத்தாவ வச்சே படம் பண்றீங்களே என் அப்பாவ வச்சு படம் பண்ண மாட்டீங்களா என கேட்டுள்ளார். இதைக்கேட்டு சிரித்த தாணு, உங்க அப்பாவ டேட் கொடுக்க சொல்லுப்பா நான் படம் பண்றேன்னு சொன்னாராம். பின்னர் ரஜினியுடம் என்ன சார் பையன் இப்படி கேட்கிறான் என பேசி சிரித்துள்ளார் தாணு.

இதையும் படியுங்கள்... அடுத்த படத்தில் லெஜெண்ட் சரவணனின் புதிய கெட்டப் இது தானா..! சும்மா மாஸாக இருக்காரே... வைரலாகும் போட்டோஸ்!

44

இதையடுத்து தனுஷ் காலா படத்தை தயாரித்த போது அப்படத்திற்கு முதலில் கபாலி 2 என பெயரிட இருந்தார்களாம். அந்த சமயத்தில் தாணுவை சந்தித்து இந்த டைட்டில் தொடர்பாக பேச சென்றுள்ளார் தனுஷ். அப்போது தனுஷும், தாணுவிடம் எப்போ சார் நாம படம் பண்ண போறோம் என கேட்டுள்ளார். இதைக்கேட்டு சிரித்த தாணு உங்களுக்கு முன் உங்க மகன் என்கிட்ட இதே கேள்விய கேட்டுட்டான் தம்பினு சொல்லி உரையாடினாராம் தாணு.

அதன்பின்னர் தான் இருவரும் இணைந்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் பணியாற்றினர். இப்படத்தை ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா இயக்கினார். இப்படத்தின் ஷூட்டிங் சமயத்திலேயே வெற்றிமாறன் பற்றி தாணுவிடம் கூறி அசுரன் பட வாய்ப்பையும் தட்டித்தூக்கி இருக்கிறார் தனுஷ். 

இதையும் படியுங்கள்... ‘குக் வித் கோமாளி சீசன் 4’ போட்டியாளர்களின் சம்பள விவரம் வெளியானது - அதிக சம்பளம் வாங்குவது இந்த பிரபலமா..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்
ரஜினிகாந்த்
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(7.0 ov)70/1
INDIND
(20.0 ov)191/8
NZ need 122 runs in 78 balls
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved