MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ‘குக் வித் கோமாளி சீசன் 4’ போட்டியாளர்களின் சம்பள விவரம் வெளியானது - அதிக சம்பளம் வாங்குவது இந்த பிரபலமா..!

‘குக் வித் கோமாளி சீசன் 4’ போட்டியாளர்களின் சம்பள விவரம் வெளியானது - அதிக சம்பளம் வாங்குவது இந்த பிரபலமா..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என்கிற விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 25 2023, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக திகழ்ந்து வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. சமையல் நிகழ்ச்சியான இது இதுவரை 3 சீசன்கள் முடிந்து தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் விசித்ரா, மைம் கோபி, ஷெரின், சிருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியன், காளையன், கிஷோர் ஆகியோர் உடன் கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக கலக்கிய சிவாங்கியும் இந்த சீசனில் குக் ஆக களமிறங்கி சமைத்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுவரை 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். தற்போது சிவாங்கி, ஆண்ட்ரியன், சிருஷ்டி, மைம் கோபி, விசித்ரா ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த சீசனில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பள விவரத்தைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... அடிமட்ட விலைக்கு விற்கப்பட்ட ‘அயலான்’ பட சாட்டிலைட் உரிமை... அதுக்குன்னு இவ்வளவு கம்மியாவா..! பின்னணி என்ன?

37

அதன்படி குக் வித் கோமாளி 4-வது சீசனின் மூலம் குக் ஆக புரமோட் ஆகியுள்ள சிவாங்கிக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.

47

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியல் நடித்து பிரபலமான விஜே விஷால், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக ஒரு எபிசோடுக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளமாக வாங்கினாராம்.

57

அதேபோல் வலிமை படத்தில் நடித்து புகழ்பெற்ற ராஜ் அய்யப்பா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்காக ரூ.26 ஆயிரம் சம்பளமாக வாங்கினாராம். அதேபோல் நடிகை விசித்ராவுக்கும் ஒரு எபிசோடுக்கு ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். நடிகை ஷெரினுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.35 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறதாம்.

67

எஞ்சியுள்ள நடிகை சிருஷ்டி டாங்கே மற்றும் ஆண்ட்ரியன் ஆகியோருக்கு ஒரு எபிசோடுக்கு தலா ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

77

இந்த சீசனிலேயே அதிக சம்பளம் வாங்கும் குக் என்றால் அது மைம் கோபி தானாம். அவருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... 19 வருஷத்துக்கு முன் விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் பண்ணிய லோகேஷ் கனகராஜ் - அடடா அதுவும் இந்த படத்திலா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குக் வித் கோமாளி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Diwali Movies : தீபாவளி-க்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் என்னென்ன புதுப்படங்கள் வரப்போகுது? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Bigg Boss-ல் விஜய் சேதுபதியை விட ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக சம்பளமா? அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?
Recommended image3
TTF Vasan Net Worth : யூடியூப்பில் கோடிக்கணக்கில் வருமானம்... டிடிஎஃப் வாசனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved