MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 19 வருஷத்துக்கு முன் விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் பண்ணிய லோகேஷ் கனகராஜ் - அடடா அதுவும் இந்த படத்திலா?

19 வருஷத்துக்கு முன் விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் பண்ணிய லோகேஷ் கனகராஜ் - அடடா அதுவும் இந்த படத்திலா?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், 19 ஆண்டுகளுக்கு முன்பே விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் பண்ணினாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 25 2023, 12:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மாநகரம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார். அதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள டாப் நட்சத்திரங்கள் லோகேஷ் கனகராஜின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர். அந்த அளவுக்கும் லோகேஷ் கனகராஜுக்கு டோலிவுட், பாலிவுட்டிலும் செம்ம டிமாண்ட் உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

டோலிவுட், பாலிவுட் பிரபலங்கள் அழைத்தாலும், தமிழ் திரையுலகில் தான் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் லோகேஷ். அதன்படி தற்போது அவர் இயக்கத்தில் லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் கவுதம் மேனன், மிஷ்கின், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், நடிகை பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.

இதையும் படியுங்கள்... ஸ்பெஷல் நபருக்கு பரிசாக கொடுக்க... பிரம்மாண்ட அப்பார்ட்மென்டை வாங்கிய ஆலியா பட் - அதன் மதிப்பு இத்தனை கோடியா?

34

லியோ படத்தை இன்னும் ஓரிரு மாதத்தில் முடித்து அதனை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு கொண்டுவர உள்ளனர். லியோ முடிந்ததும் கைதி படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங்கை ஆரம்பிக்க உள்ள லோகேஷ், அடுத்து கமலுடன் விக்ரம் படத்தின் அடுத்த பாகம், சூர்யா உடன் இரும்புக்கை மாயாவி என வரிசையாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு படங்களை புக் செய்து வைத்து உள்ளார்.

44

இந்நிலையில், விஜய்யுடன் மாஸ்டர் மற்றும் லியோ படத்தில் பணியாற்றிய லோகேஷ், 19 ஆண்டுக்கு முன் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டாராம். விஜய்யின் சச்சின் படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் விமான நிலையத்தில் நடந்தபோது, அதைப்பார்க்க தன் நண்பர்களுடன் சென்றிருந்தாராம் லோகேஷ். அப்போது கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டபோது, அதில் பின்னணியில் நடிக்க அவரது நண்பர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததாம், ஆனால் லோகேஷ் அதனை மிஸ் பண்ணிவிட்டாராம். இருந்தாலும் விஜய்யின் நடிப்பை ரசித்துப் பார்த்ததாக தெரிவித்துள்ள லோகேஷ், தற்போது அவரை வைத்து இரண்டு படங்களை இயக்கிவிட்டேன் இதற்குமேல் என்ன வேண்டும் என சிலாகித்துப்போயுள்ளாராம்.

இதையும் படியுங்கள்... கமல் மகளுக்கு கடவுள் மீது இம்புட்டு காதலா..! இணையத்தில் வைரலாகும் ஸ்ருதிஹாசனின் புது டாட்டூ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal : ஓட்டலில் ஒரே ரூமில் தர்ஷன் - அன்புக்கரசி... வீடியோவால் வெடிக்கப்போகும் புது பிரச்சனை
Recommended image2
Karuppu பட பர்ஸ்ட் ஷோ ரத்து... சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர் - காரணம் என்ன?
Recommended image3
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved