"இதுக்கு சீரியலே பண்ணி இருக்கலாம்" விக்ரம் சந்தானத்தால் கடுப்பான பிக்பாஸ் பிரபலம்!
விக்ரம் படத்தை பார்த்த பின் காஜல் பசுபதிவில், 'நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் நாங்களும் சின்னத்திரை சீரியலே பண்ணி இருக்கலாம். விஜய் டிவி சீரியல் நடிகைகள் மூவரும் விஜய் சேதுபதியுடன் கமல்ஹாசன் படத்தில் இணைந்து நடித்தது பற்றி சூப்பர் ஜி என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
Vikram
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி மாஸ் காட்டி வரும் விக்ரம். கடந்த 3-ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருவதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை ஆடி வருகிறது. இப்படம் மூன்றே நாளில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
vikram movie
கமல்ஹாசன் மிகச்சிறந்த படமாக மாறிவிட்ட விக்ரமிற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட கமல் அதில், “தரமான திரைப்படங்களை தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. திறமையான, தரமான நடிகர்களையும் தான். அந்த வெற்றி வரிசையில் என்னையும், விக்ரம் படத்தையும் ரசிகர்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம். டீமிற்கு நன்றியும், தான் அடுத்ததாக சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற உள்ள தகவலையும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
vikram movie
இந்நிலையில் விக்ரம் படம் குறித்த பிரபலங்களின் கமெண்ட் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான காஜல் பசுபதி, விக்ரம் படத்தில் சந்தானம் ஆக வரும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விஜய் டிவியை சார்ந்த சீரியல் நடிகைகள் ஷிவானி நாராயணன், மைனா நந்தினி மற்றும் மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்திருப்பது குறித்து கமெண்ட் செய்துள்ளார்.
KAJAL PASUPATHI
டிவிட்டரில் விக்ரம் குறித்து பதிவிட காஜல் பசுபதி." நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் நாங்களும் சின்னத்திரை சீரியலே பண்ணி இருக்கலாம். விஜய் டிவி சீரியல் நடிகைகள் மூவரும் விஜய் சேதுபதியுடன் கமல்ஹாசன் படத்தில் இணைந்து நடித்தது பற்றி சூப்பர் ஜி என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.