பொள்ளாச்சி மெஸுக்கு காதல் கணவருடன் டின்னர் டேட் போன காஜல் அகர்வால்... வைரலாகும் போட்டோஸ்...!
இந்நிலையில் புதுமண தம்பதிகளான காஜல் அகர்வாலும், கெளதம் கிட்சிலுவும் தங்களுடைய திருமணத்திற்கு பிந்தைய முதல் காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.
சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் புதுமண தம்பதிகளான காஜல் அகர்வாலும், கெளதம் கிட்சிலுவும் தங்களுடைய திருமணத்திற்கு பிந்தைய முதல் காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ் உணவகத்தில் காஜல் அகர்வால் மற்றும் அவருடைய கணவர் கவுதம் கிச்சலுவுடன் உணவருந்தி உள்ளார். அதுமட்டுமின்றி அந்த உணவகத்தை நடத்தும் தம்பதிகளுடனும் ஜோடியாக போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்
அந்த உணவகம் குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள காஜல் அகர்வால், “சாந்தி உணவகம் எனக்கு மிகவும் பிடித்த உணவகம். சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா எனக்கு மிகவும் பாசத்தோடு உணவை பரிமாறுவார்கள். கடந்த 27 வருடங்களாக சுவை மாறாமல் அதே அருமையான சுவையுடன் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்கள். நான் இந்த உணவகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளாக வந்து செல்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.