ஆதிவாசி... மற்றும் ஏவாளாக மாறி காஜல் அகர்வால் எடுத்து கொண்ட போட்டோஸ் ஷூட்..! த்ரோ பேக் போட்டோஸ்..!
நடிகை காஜல் அகர்வால் ஆதிவாசி உடையிலும், ஏவாள் கெட்டப்பில் எடுத்து கொண்ட த்ரோ பேக் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ...
தமிழில் நடிகர் பரத் கதாநாயகனாக நடித்த 'பழனி' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இதை தொடர்ந்து 'சரோஜா', 'மோதி விளையாடு' போன்ற படங்களில் நடித்த நிலையில், இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.
எனவே தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் காஜல் கவனம் செலுத்தி வந்த நிலையில், ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர், நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்த 'நான் மகான் அல்ல' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதால் மீண்டும் தமிழ் படங்களில் பிஸியான நடிகையாக மாறினார்.
தெலுங்கு திரையுலகில் இவர் முன்னணி ஹீரோக்களுக்கு மட்டுமே நாயகியாக நடித்த நிலையில், தமிழிலும் முன்னணி நடிகர்கள் படங்களை மட்டுமே தேர்வு செய்த நடிக்க துவங்கினார். அந்த வகையில் சூர்யாவுக்கு ஜோடியாக மாற்றான், விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் போன்ற படங்களில் நடித்தார். அதே போல் அஜித்துக்கு ஜோடியாக விவேகம்... என தொடர்ந்து தமிழில் டாப் நடிகர்கள் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு, தன்னுடைய நீண்ட நாள் காதலரான கௌதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்ட காஜல், சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார்.
குழந்தை பெற்ற ஆறு மாதத்திற்கு பின்னர், மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கி உள்ள காஜல் அகர்வால்... தற்போது தமிழில் கருங்காப்பியம், கோஷ்டி, இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் உமா என்கிற படத்திலும் நடித்துள்ளார்.
திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வாலின் த்ரோ பேக் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
காஜல் அகர்வால் லவ் டுடே படத்தின் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோமாளி திரைப்படத்தில் இடம்பெறும் சில காட்சிக்காக, காட்டு வாசி மற்றும் ஏவாள் போன்று உடை அணிந்து நடித்திருப்பார். இவரின் இந்த த்ரோ பேக் போட்டோஸ் தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.