Kaithi Screens in Russia : ரஷ்யாவை கலக்கும் கார்த்தி..'உஸ்னிக்'-கின் பிரம்மாண்ட வெளியீடு!
Kaithi Screens in Russia : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிய கைதி படம் தற்போது ரஸ்யாவில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

kaithi
'மாநகரம்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கைதி'. கார்த்தி நடிப்பில் வெளியான தந்தை - மகள் செண்டிமென்ட்டுடன், ஒரே இரவில் நடக்கும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அசத்தலான வரவேற்பை பெற்றது.
kaithi
அப்போது 'பிகில்' படத்திற்கு போட்டியாக வெளியான 'கைதி' படம் வெளியானது. இதனால் குறைவான எண்ணிக்கை திரையரங்கில் வெளியான கத்தி பின்னர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் காரணமாக 350 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. டார்க் பேக்ரவுண்டில் நடக்கும் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
Kaithi
நரேன், அர்ஜுன் தாஸ், பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. பாடல்கள் இன்றி உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் 'கைதி' மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இதன் இந்தி ரீமேக் அஜய் தேவ்கன் நடிப்பில் 'போலா' என்ற பெயரில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது.
kaithi
இந்தியில் ட்ரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் மற்றும் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் அடுத்த ஸ்டெப்பாக ரஷ்யாவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகிறது 'கைதி'. 'உஸ்னிக்' என்ற பெயரில் சுமார் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் வெளியாகிறது.