ஆர்ஆர்ஆர், விக்ரம் பிளாக்பாஸ்டர்களை பின்னுக்கு தள்ளிய கடைசி விவசாயி !
முதல் 25 படங்களின் பட்டியலில், "கடைசி விவசாயி" அதிக ரேட்டிங் பெற்ற இந்திய திரைப்படமாக குறிப்பிடப்பட்டுள்ளது. "ஆர்ஆர்ஆர்" ஆறாவது திரைப்படமாகவும், கமல்ஹாசன் நடித்த "விக்ரம்" பதினொன்றாவது இடத்திலும் உள்ளது.
Kadaisi Vivasayi
வயதான விவசாயியின் உணர்ச்சியாக வெளியான படம் கடைசி விவசாயி. எம். மணிகண்டன் எழுதி, இயக்கிய இந்த படத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர் . ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 11 அன்று வெளியானது. இதில் எண்பத்தைந்து வயது விவசாயியாக நடித்த நல்லாண்டியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
Kadaisi Vivasayi
கடந்த 2016 இல் படம் குறித்த அறிவிப்பு வெளியான போதிலும் படப்பிடிப்பு பல ஆண்டுகள் தாமதமானது. முன்னதாக இதில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பேசப்பட்ட்தாகவும், வயாதான் தோற்றத்தில் நடிக்க அவர் மறுத்ததை அடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டில், இயக்குனர் விஜய் சேதுபதியை முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை படத்தை மணிகண்டன் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு...இது அருவாவும் இல்லை..சூர்யாவுக்கான கதையும் இல்லை..விஷயத்தை உடைத்த இயக்குனர் ஹரி !
Kadaisi Vivasayi
இன்னும் நலிவு நிலையிலிருந்து மீளாத விவசாயின் கவலையும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்து சொன்ன இந்த படம் பலரது பாராட்டுக்களை பெற்றது. இதில் வரும் வசனங்களை மனதை உருக்கும் வண்ணம் இருந்தன. வழக்கமான ரொமாண்டிக் பீஜியம், அதிரடி இல்லாமல் போனதாலோ என்னமோ மக்களிடம் அதிக வரவேற்பை இந்த படம் பெறவில்லை.
மேலும் செய்திகளுக்கு...விஜய் தேவரகொண்டாவால் கதறி அழுத இளம்பெண்..பதறிப்போன நாயகன்!
Kadaisi Vivasayi
விஜய் சேதுபதியை கேமியோவில் தோன்றிய இந்த படத்தில் முதலில் இளையராஜாவின் இசை என அறிவிக்கப்பட்டது. பின்னர் இளையராஜாவுக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனால் கடுப்பான இசைஞானி இயக்குனர் மணிகண்டன் மீது இசையமைப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...அன்று சூர்யா... இன்று ஷாருக்கான் - மாதவனின் ராக்கெட்ரி டீம் வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வைரல்
Kadaisi Vivasayi
இவ்வாறு பல இன்னல்களுக்கு இடையில் வெளியான இந்த படம் வெளியீட்டிற்கு பிறகு பேராதரவை சமூக ஊடகங்கள் மூலம் பெற்று வருகிறது. அந்தவகையில் லெட்டர்பாக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, உலகளவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற முதல் 25 படங்களின் பட்டியலில், "கடைசி விவசாயி" அதிக ரேட்டிங் பெற்ற இந்திய திரைப்படமாக குறிப்பிடப்பட்டுள்ளது. "ஆர்ஆர்ஆர்" ஆறாவது திரைப்படமாகவும், கமல்ஹாசன் நடித்த "விக்ரம்" பதினொன்றாவது இடத்திலும் உள்ளது.