ஒரே பைக்கில் விஜய்சேதுபதியை இறுக்கி அணைத்தபடி நயன்தாரா, சமந்தா... வைரலாகும் போட்டோ...!
இந்நிலையில் காத்து வாக்குல இரண்டு காதல் படத்திலிருந்து வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
“நானும் ரவுடி தான்” பட வெற்றியைத் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி ஆகியோர் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படம் மூலம் ஒன்றிணைந்துள்ளனர். இந்த முறை எக்ஸ்ட்ரா போனஸாக சமந்தாவும் நடித்து வருவதால் ரசிகர்கள் பட்டாளம் செம்ம குஷியில் உள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2020-ம் ஆண்டின் காதலர் தினத்தன்று படக்குழு வெளியிட்டது
இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஐதராபாத்திலும், இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையிலும் நிறைவடைந்த நிலையில் காதலர் தின ஸ்பெஷலாக முதல் பாடலை படக்குழு வெளியிட்டது.
விக்னேஷ் சிவனின் வரிகளில், அனிருத் இசையில் வெளியான‘இரண்டு காதல்’ என்ற லவ் பெயிலியர் பாடல் சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக மாறியது.
இந்நிலையில் காத்து வாக்குல இரண்டு காதல் படத்திலிருந்து வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒரே பைக்கில் விஜய் சேதுபதியை நயன்தாராவும், சமந்தாவும் இறுக்கி அணைத்த படி இருப்பது போன்ற போஸ்டர் தற்போது லைக்குகளை அள்ளி வருகிறது.ம்ம்.. ஒரே பைக்கில் நயன்தாரா, சமந்தா விஜய்சேதுபதி யோகக்காரர் ப்பா என ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.