MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அவரு தைரியமான ஆளாச்சே; 'பரதேசி' படப்பிடிப்பில் பாலா செய்த மோசமான செயல்! கொந்தளித்த காஜல் பசுபதி!

அவரு தைரியமான ஆளாச்சே; 'பரதேசி' படப்பிடிப்பில் பாலா செய்த மோசமான செயல்! கொந்தளித்த காஜல் பசுபதி!

நடிகையும், தொகுப்பாளருமான காஜல் பசுபதி, பெரிய இயக்குனர் தனக்கு கொடுத்த சிக்னல் பற்றியும், இயக்குனர் பாலா 'பரதேசி' படப்பிடிப்பில் நடந்து கொண்ட விதம் குறித்தும், பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Sep 02 2024, 09:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kaajal Pasupathji Speech

Kaajal Pasupathji Speech

எல்லா துறையிலுமே பாலியல் சீண்டல்கள் இருந்தாலும், சினிமாவை பொறுத்தவரை சற்று கூடுதலாகவே இந்த பிரச்சனை இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சமீப காலமாக சீரியல் நடிகைகள் முதல்.. இளம் நடிகைகள் வரை, பலர் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேட்டிகளில் கூறி வருகின்றனர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Sexual Harassment

Sexual Harassment

கேரள நடிகைகளுக்கு ஏற்படும், பாலியல் தொல்லை குறித்து பதிவு செய்யப்பட்ட ஹேமா அறிக்கை கடந்த வாரம் வெளியான நிலையில் அடுத்தடுத்து பல நடிகைகள் ஏராளமான பாலியல் புகார்களை முன்வைத்து வருகின்றனர். இந்த புகார்களை ஏன் முன்பே கூறவில்லை என ஒரு பேச்சு அடிபட்டு வந்தாலும், ஹேமா அறிக்கை நடிகைகள் அவர்களுடைய வாழ்க்கையில் சந்தித்த சில மோசமான சம்பவங்களை வெளியே சொல்வதற்கான தைரியத்தை கொடுத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

அந்த காட்சியில் நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது! 'வாழை' படத்தை பார்த்த பின் ரஜினி வெளியிட்ட அறிக்கை!

35
Hema Committee

Hema Committee

கேரள நடிகைகள் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளிலும் நடிகைகள் இதுபோன்ற பிரச்சனைகளை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே குஷ்பூ, ராதிகா, போன்ற சீனியர் நடிகைகள் தமிழ் சினிமாவில் பாலியல் பிரச்சனை இருப்பதை வெளிப்படையாக கூறியுள்ள நிலையில் , தற்போது சின்னத்திரை சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையும்.. தொகுப்பாளருமான காஜல் பசுபதி... பெரிய இயக்குனர் ஒருவர், தன்னுடைய விரலை சுரண்டி அட்ஜஸ்ட்மென்ட்க்கு  சிக்னல் கொடுத்தது பற்றியும், இயக்குனர் பாலா 'பரதேசி' படப்பிடிப்பில் துணை நடிகை இடம் நடந்து கொண்ட விதம் குறித்தும் விமர்சித்து பேசி உள்ளார்.
 

45
Kajal Pasupathi Movie And Serial

Kajal Pasupathi Movie And Serial

காஜல் பசுபதியை பொருத்தவரை, எதையும் நேராக வெளிப்படையாக கூறக்கூடிய நபர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் மிகவும் ஸ்டிரைட் ஃபார்வேட் நபர் என்பதாலேயே இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் பறிபோனதாம். ஒருமுறை சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க,  அந்த பெரிய இயக்குனர் தன்னிடம் கைகுலுக்கி விட்டு, விரலை சுரண்டி அட்ஜஸ்மென்ட்க்கு ஓகேவா என்று சிக்னல் கொடுத்ததாகவும்,தனக்கு அது புரிந்தாலும் எதுவும் தெரியாதது போல் காட்டிக்கொண்டு அந்த பத்து நாள் ஷூட்டிங்கை நடித்து கொடுத்ததாக கூறியுள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் வயிற்றை காட்டியபடி.. தீபிகா படுகோன் வெளியிட்ட பிரக்னன்சி போட்டோ ஷூட்!
 

55
Kaajal Pasupathi Shocking Allegation

Kaajal Pasupathi Shocking Allegation

இதை தொடர்ந்து  இயக்குனர் பாலா குறித்து பேசியுள்ள காஜல் பசுபதி, "இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் நானும் நடித்திருந்தேன். அப்போது தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் வேதிகாவை அடிப்பது போல் ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியில் வேதிகாவுக்கு பதிலாக ஒரு துணை நடிகையை அழைத்து பாலா கடுமையாக அடித்து காண்பித்தார். இதை பார்த்ததும் என் கண்கள் கலங்கிவிட்டது. அவர்தான் ரொம்ப தைரியமான ஆளாச்சே, ஹீரோயினையே அடிக்க வேண்டியது தானே? ஏன் அவரால் ஹீரோயினை அடிக்க முடியவில்லை. ஒரு துணை நடிகைக்கு நேர்ந்த அதே சம்பவம் தனக்கும் நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ஆதங்கத்தோடு பேசி உள்ளார்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
இயக்குநர் பாலா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved