பிரபல நடிகையின் காலில் விழுந்து வணங்கிய ஜோதிகா; வைரலாகும் போட்டோ அண்ட் வீடியோ!
Jyothika Touch Shabana Azmi Feet in Dabba Cartel Trailer Launch Event : மும்பையில் நடைபெற்ற டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸ் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா பிரபல நடிகையின் காலை தொட்டு வணங்கியுள்ளார்.

டப்பா கார்ட்டெல் டிரெய்லர் வெளியீட்டு விழா
Jyothika Touch Shabana Azmi Feet : திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா, இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். 2010 ஆம் ஆண்டு நாகவள்ளி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்த ஜோதிகா, 5 ஆண்டுகளுக்கு பிறகு 36 வயதினிலே என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே, சந்திரமுகி 2, சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஜோதிகா, ஷபானா ஆஸ்மியை வணங்கினார்
சென்னையிலிருந்து மும்பையில் தனது குடும்பத்துடன் செட்டிலானார். இதையடுத்து பாலிவுட்டில் அதிக வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸிலும், லையன் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான் நேற்று இந்த வெப் சீரிஸ் படமான டப்பா காட்டெல் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
டப்பா கார்ட்டெல் நெட்ஃபிளிக்ஸில்
மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வெப் தொடரின் முழு நட்சத்திர நடிகர்களும் கலந்து கொண்டனர். அப்போது ஜோதிகா, ஷபானா ஆஸ்மியின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார். டப்பா கார்ட்டெல் நிகழ்வில் ஜோதிகா ஷபானா ஆஸ்மியின் பாதங்களைத் தொட்டபோது, அவர் முதலில் திடுக்கிட்டார், பின்னர் புன்னகையுடன் ஆசிர்வதித்தார். ஜோதிகா-ஷபானா ஆஸ்மி நடிக்கும் டப்பா கார்ட்டெல் வெப் தொடர் நெட்ஃபிளிக்ஸில் பிப்ரவரி 28 முதல் ஒளிபரப்பாகும்.
ஜோதிகா & ஷபானா ஆஸ்மி
டப்பா கார்ட்டெல் வெப் தொடர் நிகழ்வில் ஜோதிகாவும் ஷபானா ஆஸ்மியும் மகிழ்ச்சியான மனநிலையில் காணப்பட்டனர். இருவரும் இணைந்து புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தனர். டப்பா கார்ட்டெல் நிகழ்வில் ஷபானா ஆஸ்மி மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். அவர் தலையில் டப்பாவை வைத்து போஸ் கொடுத்தார். டப்பா கார்ட்டெல் வெப் தொடரில் ஜோதிகா, ஷபானா ஆஸ்மி ஆகியோருடன் அஞ்சலி ஆனந்த் மற்றும் ஷாலினி பாண்டேவும் நடிக்கின்றனர்.