- Home
- Cinema
- அடுத்தடுத்த ஆதாரங்களை இறக்கும் ஜாய் கிரிசில்டா... மாதம்பட்டி ரங்கராஜ் என்னமா வழிஞ்சு பேசுறாரு பாருங்க..!
அடுத்தடுத்த ஆதாரங்களை இறக்கும் ஜாய் கிரிசில்டா... மாதம்பட்டி ரங்கராஜ் என்னமா வழிஞ்சு பேசுறாரு பாருங்க..!
மாதம்பட்டி ரங்கராஜ் தான் மிரட்டலின் பேரில் திருமணம் செய்துகொண்டதாக கூறியதை அடுத்து, அவர் தன்னிடம் வழிந்து பேசிய வீடியோவை வெளியிட்டு அதிரடி காட்டி உள்ளார் ஜாய் கிரிசில்டா.

Madhampatty Rangaraj Flirting Video
ஜாய் கிரிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த விவகாரத்தில் மகளிர் ஆணையத்தில் இருவரும் ஆஜரான நிலையில், அவர்களிடம் கடந்த மாதம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையின் போது, தான் ஜாயை காதலித்து திருமணம் செய்துகொண்டதை மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாகவும், அந்த குழந்தைக்கு நான் தான் அப்பா என ஆணையத்தின் விசாரணையின் போது மாதம்பட்டி ரங்கராஜ் கூறியதாகவும், ஜாய் கிரிசில்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தினங்களுக்கு முன் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் மறுப்பு
ஆனால் நேற்று மாதம்பட்டி ரங்கராஜ் இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், தான் மகளிர் ஆணையத்தில் எந்தவித ஒப்புதலும் அளிக்கவில்லை. ஜாய் கிரிசில்டா என்னை மிரட்டி திருமணம் செய்துகொண்டார். அந்த குழந்தைக்கு நான் பொறுப்பாக முடியாது. டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கவும் நான் தயாராக உள்ளேன். அப்படி அதில் அது என்னுடைய குழந்தை என ரிசல்ட் வந்தால், அந்த குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். தன்னைப்பற்றி அவதூறு பரப்பும் ஜாய் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
ஜாய் கிரிசில்டா பதிலடி
இதையடுத்து நேற்று இரவு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வாயிலாக விளக்கம் அளித்த ஜாய் கிரிசில்டா, மிரட்டி கல்யாணம் பண்ண, இவர் என்ன சின்ன குழந்தையா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார். மகளிர் ஆணையத்தில் ஒன்றை பேசிவிட்டு, வெளியே வந்து வேறு ஒன்றை கூறுகிறார். அங்கு டிஎன்ஏ டெஸ்ட் வேண்டாம் என கூறிவிட்டு, அறிக்கையில் டிஎன்ஏ டெஸ்டுக்கு தயார் என வாய்க்கூசாம பொய் சொல்கிறார். என்னிடம் அவர் சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கான போட்டோக்களும் வீடியோக்களும் உள்ளன. அதையெல்லாம் வெளியிட்டால் உங்களுக்கே புரியும் என கூறி இருந்தார்.
வைரலாகும் புது வீடியோ
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ், தனக்கு அனுப்பிய வீடியோ ஒன்றை சாம்பிள் ஆக வெளியிட்டு இருக்கிறார் ஜாய். அதில் ஹேய் பொண்டாட்டி, சீக்கிரம் வந்துரு என வழிஞ்சு பேசுகிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா? என கேள்வி எழுப்பி உள்ள ஜாய். இதுல அவர் லவ் வா பேசுறாரா இல்லை மிரட்டலின் பெயரில் பேசுறாரானு மக்களே ப்ளீஸ் நீங்களே சொல்லுங்க. கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுனு சொல்ற மாதிரி இருக்கு என பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார் ஜாய் கிரிசில்டா. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! Mr husband @MadhampattyRR ?
மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க — இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா?
கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி 😂😂
This message was sent to me by my so-called… pic.twitter.com/AH8yekYNBs— Joy Crizildaa (@joy_stylist) November 6, 2025