MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதல் பொண்டாட்டி ஏன் வாயே திறக்கல, என் மாமியார் என்ன வாழ்த்துனாங்க – ஜாய் கிரிசில்டாவின் முதல் பேட்டி!

முதல் பொண்டாட்டி ஏன் வாயே திறக்கல, என் மாமியார் என்ன வாழ்த்துனாங்க – ஜாய் கிரிசில்டாவின் முதல் பேட்டி!

Joy Crizildaa First Exclusive Interview : முதல் பொண்டாட்டி ஏன் வாயே திறக்கவில்லை என்றும், என்னுடைய மாமியார் என்னை வாழ்த்தி தன்னுடைய மகன் முகத்தில் இப்போதுதான் சிரிப்பை பார்ப்பதாக கூறியதாக ஜாய் கிரிசில்டா முதல் பேட்டியில் கூறியுள்ளார்.

3 Min read
Rsiva kumar
Published : Sep 07 2025, 11:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

Joy Crizildaa First Exclusive Interview : நாளுக்கு நாள் ஜாய் கிரிசில்டாவின் கத்தலும், குமுறலும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆனால், இடியே விழுந்தாலும் அசராமல் சைலண்டாவே மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகிறார். அவருக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய செய்திகள் தான் இப்போது அடிக்கடி தலைப்புச் செய்திகளில் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜிற்கு வழக்கறிஞர் ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை 2ஆவதாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

26
Image Credit : Asianet News

அப்போது அவர் 6 மாதம் கர்ப்பம் என்பது குறிப்பிடப்படத்தக்கது. மாதம்பட்டி ரங்கராஜைப் போன்று ஜாய் கிரிசில்டாவும் ஏற்கனவே திருமணம் ஆனவர். கிரிசில்டா மற்றும் இயக்குநர் ஜே ஜே ஃப்ரெட்ரிக் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் உடன் பழக்கம் ஏற்படவே அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அதோடு, அவரை காதலிக்கவும் செய்துள்ளார். இருவரும் ஒன்றாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஜாய் கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துள்ளார். 

இதைத் தொடர்ந்து ஜாய் கிரிசில்டா அடிக்கடி மாதம்பட்டி ரங்கராஜ் உடன் இருக்கும் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். மேலும் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

36
Image Credit : Asianet News

மேலும், தனக்கு பிறக்க போகும் குழந்தைக்கு வைக்க போகும் பெயர் கூட தேர்வு செய்துள்ளார். இந்த சூழலில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது முதல் மனைவி ஸ்ருதி இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக கலந்து கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தான் ஜாய் கிரிசில்டா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ரங்கராஜ் தான் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் பகுதிநில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் திடீரென கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளதாக கூறினார்.

46
Image Credit : x/joy_stylist

இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்-தான் தந்தை, தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும். மாதம்பட்டி ரங்கராஜை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியதாக தெரிவித்தார். மேலும் கருவை கலைக்கும் படி வற்பறுத்தி அடித்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

56
Image Credit : Asianet News

அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும் போது தனது மனைவியை விட்டு பிரிந்து இருப்பதாக தெரிவித்ததால் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் சற்று சைலண்டாக இருந்த ஜாய் கிரிசில்டா தனது மன வேதனையை வெளிப்படுத்து விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: "பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார்." தர்மம் ஜெயிக்கும் என்று பதிவிட்டிருந்தார்.

66
Image Credit : X

இந்த நிலையில் முதல் முறையாக அவர் சிவசங்கரி டாக்ஸிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜிற்கும் திருமணம் நடந்தது அவரது முதல் மனைவியான ஸ்ருதி பிரியாவிற்கு நன்கு தெரியும். அவருக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. நாங்கள் இருவரும் ஒன்றரை வருடங்களாக இருந்து வரும் நிலையில் ஏன் அவர் எந்த பிரச்சனையும் செய்யவில்லை. அவர் மட்டும் பிரச்சனை செய்திருந்தால் இன்று என்னுடைய வாழ்க்கை இவ்வளவு பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் பதில் சொல்லுவாங்க, ஸ்ருதி பிரியா பதில் சொல்லுவாங்களா? என்றெல்லாம் சரிமாரியாக கேள்விகள் எழுப்பி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivasankari Talks (@sivasankari_talks)

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved