- Home
- Cinema
- என்னெல்லாம் கட்டுக் கதை விடுறான் பாருங்க; அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டியை நோஸ்கட் பண்ணிய ஜாய் கிரிசில்டா..!
என்னெல்லாம் கட்டுக் கதை விடுறான் பாருங்க; அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டியை நோஸ்கட் பண்ணிய ஜாய் கிரிசில்டா..!
நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண சம்மதிக்க மாட்டேன் என குறிப்பிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு ஜாய் கிரிசில்டா பதிலடி கொடுத்துள்ளார்.

Joy Crizildaa Reply to Madhampatty Rangaraj.
மாதம்பட்டி ரங்கராஜ் திருமண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் செவி சாய்க்காத மாதம்பட்டி ரங்கராஜ், விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை. இந்த நிலையில், நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை
அந்த அறிக்கையில், ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்து வைக்குமாறு பல பேர் தன்னை அணுகி வருவதாகவும் நீதித்துறை செயல்பாட்டில் தனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதால் சட்டப்படி இந்த சர்ச்சையைத் தீர்க்க, தான் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இந்தப் பிரச்சினை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபட மாட்டேன் என்று, அதற்கு தான் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ஊடகங்கள் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், தற்போது நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்தவித கருத்துகளையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ள மாதம்பட்டி, தான் இந்த சர்ச்சையை சட்டப்படி எதிர்கொள்வேனே தவிர, ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண சம்மதிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.
ஜாய் கிரிசில்டா பதிலடி
அவரின் இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஜாய் கிரிசில்டா. அதன்படி, அந்த அறிக்கையை குறிப்பிட்டு, ‘ஹலோ ஹஸ்பண்ட், பர்ஸ்ட் நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு வாங்க, சட்டம் தன் கடமையை செய்யும். நானும் சட்டப்படி தான் போராடுவேன், கோர்ட்டுக்கு வெளியில் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து போட்டுள்ள மற்றொரு பதிவில் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்துகொண்டபோது எடுத்த போட்டோவை பதிவிட்டு, சட்டத்திற்கு முன் நீங்க ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது மாதம்பட்டி ரங்கராஜ் என குறிப்பிட்டு உள்ளார் ஜாய்.
கட்டு கதை
இறுதியாக போட்ட பதிவில் “என்ன எல்லாம் கட்டு கதை விடுறான் பாருங்க என குறிப்பிட்டு சிரிக்கும் எமோஜிக்களை பதிவிட்டு, விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என்கிற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ், தான் கோர்ட்டுக்கு வெளியே இந்த பிரச்சனையை முடிக்க முயல்வதாக கூறுவதெல்லாம் கட்டு கதை என்பதை குறிப்பிடும் வகையில் பதிவிட்டிருந்த ஜாய் கிரிசில்டா சிறிது நேரத்தில் அந்த பதிவை நீக்கிவிட்டார்.