நல்ல வேலை ஜோவிகா கணக்கு போட்ட லட்சணத்தை விசித்ரா பார்க்கல! இதுக்கு தான் படிக்கணும்.! கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஜோவிகா மற்றும் விஜய் வர்மா போட்ட கணக்கின் லட்சணத்தில் வீடியோ வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
BB Tamil 7
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில்... இந்த முறை கலந்து கொண்டுள்ள சில போட்டியாளர்கள் தங்களுடைய பள்ளி கல்வியை கூட இன்னும் சரியாக முடிக்காதவர்கள். எனினும் ஒரு சிலர் தங்களின் கேரியரில் வெற்றிபெற்று விட்டதால், இதுபற்றி பெரிதான விவாதம் எழவில்லை.
BB Tamil 7
ஆனால், ஜோவிகா தற்போது தான் 18 வயதை எட்டியுள்ளார். மீண்டும் படிக்க வேண்டும் என நினைத்தால் இதுவே அவரின் சரியான வயதும் கூட, எனவே... விசித்ரா அவரிடம் குறைந்தபாசம் 12-ஆவது வரையிலாவது படிக்க வேண்டும் என, கூறியதற்கு, ஜோவிகா சும்மா பட்டாசு போல் வெடித்து... விசித்ராவின் வயசுக்கு கூட மரியாதை இல்லாமல் பேசியது பரபரப்பாக பார்க்கப்பட்டது.
லதா ரஜினிகாந்த் எதிராக தொடரப்பட்ட மோசடி வழக்கு! பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
இதை தொடர்ந்து படிப்பு குறித்து மிகப்பெரிய விவாதமே பிக்பாஸ் வீட்டில் நடந்தது. குறிப்பாக கமல்ஹாசன் படிக்க வேண்டும் என்கிற விதி இருக்கலாம் ஆனால் கல்வி வதை இருக்க கூடாது என கூறினார். அதே சமையம் படிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதையும் ஆணி தனமாக தெரிவித்தார் கமல். மக்கள் பலரும், விசித்ராவுக்கு ஆதரவாகவே தங்களின் கருத்தை தெரிவித்து வந்தனர். காரணம் படிக்காமல் 4 பேர் வாழக்கையில் உயர்த்திருக்கலாம், ஆனால் 40 பேர் படித்து தான் முன்னணி இடத்திற்கு வந்துள்ளனர். இதற்க்கு அம்பேத்கர், காந்தி, ராதா கிருஷ்ணன், மற்றும் பலரை உதாரணமாகவும் கூறினார்கள்.
இப்படி படிப்பு பற்றி வாய் கிழிய பேசிய, ஜோவிகா கணக்கு போட்ட லட்சணத்தின் வீடியோ ஒன்றை தான் பிக்பாஸ் ரசிகர்கள் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள். ஜோவிகா ஷாப்பிங் செய்யும் போது... 400*4 எவ்வளவு என யோசிக்க, அங்கு வரும் விஜய் 800 என்று கூறுகிறார். இதற்கு ஜோவிகாவுக்கு கணக்கு தெரியாததால்.. அவர் எதுவும் சொல்லவில்லை. இந்த வீடியோவை வெளியிட்டு தான் நல்ல வேலை இதை விசித்ரா பார்க்கல என கூறி நெட்டிசன்கள் செம்மையாக கலாய்த்து வருகிறார்கள். சிலர் இதற்கு தான் படிக்க வேண்டும் என கூறுவது என தெரிவித்து விஜய் மற்றும் ஜோவிகாவுக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D