ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்... ரவி மோகன் கொடுத்த தரமான டாப் 5 ஹிட் படங்கள்
நடிகர் ரவி மோகன் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் நடிப்பில் வெளியான டாப் 5 ஹிட் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ravi Mohan Top 5 Hit Movies
நடிகர் ரவி மோகன், இவர் வாரிசு நடிகராக இருந்தாலும் சினிமாவில் தன்னுடைய உழைப்பால் அடுத்தடுத்த உயரங்களை தொட்டவர். இவர் ஹீரோவாகும் முன்பே கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதையடுத்து ஜெயம் படம் மூலம் அறிமுகமான ரவி மோகன், தொடர்ச்சியாக பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறார் ரவி மோகன். ஆனால் ஒரு காலத்தில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தன. அந்த வகையில் ரவி மோகன் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான டாப் 5 படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜெயம்
ரவி மோகனுக்கு அடையாளத்தை கொடுத்த படம் என்றால் அது ஜெயம் தான். இப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார் ரவி. இப்படம் தெலுங்கில் வெளியான ஜெயம் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ரவி மோகனின் அண்ணன் மோகன் ராஜா இயக்கி இருந்தார். முதல் படத்திலேயே தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார் ரவி. அப்படத்தில் இவரது நடனமும் பெரியளவில் பேசப்பட்டது. சதா - ரவி மோகன் இடையேயான கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க் அவுட் ஆனதால் ஜெயம் வெற்றி வாகை சூடியது.
எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி
ஜெயம் படத்தின் வெற்றிக்கு பின் ரவி மோகன் நடித்த படம் தான் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. இப்படமும் ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் தான். இப்படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக அசின் நடித்துள்ளார். ஒரு அம்மா - மகன் இடையேயான உறவை அழகாக சொன்ன படம் தான் இது. இதில் ரவி மோகனின் அம்மா வேடத்தில் நடிகை நதியா நடித்திருந்தார். அதேபோல் தன் தந்தையாக நடித்த பிரகாஷ் ராஜுக்கு ஒரு பிரச்சனை என வந்ததும், அவருக்காக ஆக்ஷனில் இறங்கும் காட்சி தற்போது பார்த்தாலும் சிலிர்ப்பூட்டும். இப்படத்தையும் மோகன் ராஜா தான் இயக்கி இருந்தார்.
உனக்கும் எனக்கும்
தொடர்ந்து அண்ணன் இயக்கத்தில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்த ரவி மோகன், அடுத்தடுத்து வேறு இயக்குனர்களுடன் தாஸ், மழை, இதயத் திருடன் போன்ற படங்களில் நடித்தார். அதெல்லாம் பிளாப் ஆனதால், அவர் மீண்டும் தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா உடன் இணைந்த படம் தான் உனக்கும் எனக்கும். இது ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் தான். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாரு கதைக்களத்தை மாற்றி இதிலும் வெற்றி கண்டது ரவி மோகன் - மோகன் ராஜா கூட்டணி. இப்படம் ரவி மோகனுக்கு தரமான கம்பேக் படமாக அமைந்தது. இப்படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.
பேராண்மை
மோகன் ராஜா தவிர்த்து ரவி மோகனுக்கு வெற்றியை தேடித்தந்த ஒரு இயக்குனர் என்றால் அது எஸ்.பி.ஜனநாதன் தான். அவர் இயக்கத்தில் பேராண்மை படத்தில் நடித்தார் ரவி மோகன். இதில் ஒரு என்சிசி டிரெயினராக நடித்திருந்தார். காட்டுக்குள் பயங்கரவாதிகள் செய்யும் சதியை தன்னுடைய மாணவிகளுடன் சேர்ந்து அழிக்கும் ஒரு ஆசிரியரின் கதை தான் இந்த பேராண்மை. இப்படத்திற்காக சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் மாஸ் லுக்கிற்கு மாறியதோடு, ஆக்ஷன் காட்சிகளிலும் அதகளம் செய்திருந்தார் ரவி மோகன். அவரது கெரியரில் பேராண்மை படம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தனி ஒருவன்
பேராண்மை படத்திற்கு பின்னர் ரவி மோகனுக்கு பெரியளவில் வெற்றி எதுவும் கிடைக்காமல் இருந்த நிலையில், அவர் மீண்டும் தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா உடன் இணைந்த படம் தான் தனி ஒருவன். வழக்கமாக ரீமேக் படங்களில் இணையும் இந்த கூட்டணி, இந்த முறை ஒரு புது ஸ்கிரிப்டோடு களமிறங்கியது. அது தான் தனி ஒருவன். இப்படத்தில் போலீஸ் ஆக நடித்திருந்தார் ரவி. இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதியின் இசையும் கூடுதல் பலம் சேர்த்து இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இப்படம் ரவி மோகன் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்தது.