Ravi Mohan Emotional Speech about Kenisha Francis : ரவி மோகன் ஸ்டூடியோஸ் தொடக்க விழாவில் நடிகர் ரவி மோகன் கெனிஷாவைப் பற்றி புகழ்ந்து உணர்ச்சிப்பூர்வமாக பேசிய வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ரவி மோகன் மற்றும் ஆர்த்தியின் திருமண விவாகரத்திற்கு முக்கிய காரணமே கெனிஷா தான் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில் இன்று தனது இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமே கெனிஷா தான் என்று ரவி மோகன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெயம் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான ரவி மோகன் இன்று பராசக்தி, தனி ஒருவன் 2, ஜெனீ மற்றும் கராத்தே பாபு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். என்னதான் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல கசப்பான சம்பவங்களை எதிர்கொண்டு வருகிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டு ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் இருவரும் ஒன்றாக சுற்றி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதுமட்டுமின்றி ரவி மோகனின் விவாகரத்திற்கு முக்கிய காரணமே கெனிஷா தான் என்றெல்லாம் செய்தி வெளியானது.

இந்த சூழலில் தான் இன்று நடைபெற்ற ஆர் எம் ஸ்டூடியோஸ் தொடக்க விழாவில் கெனிஷாவைப் பற்றி உணர்ச்சிப்பூவர்மாக பேசி தனது வளர்ச்சியில் முக்கிய பங்கு அவர் தான் என்றும், அவர் கடவுள் அனுப்பி வைத்த கிஃப்ட் என்றும் பேசி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ரவி மோகன் தனது பெயரில் ஸ்டூடியோஸ் ஒன்றை தொடங்கியுள்ளார். அதன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிவகார்த்திகேயன், கார்த்தி, ஷிவராஜ் குமார், ஜெனீலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், எஸ் ஜே சூர்யா என்று ஏராளமான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், ரவி மோகனின் சகோதரர் மோகன் ராஜா மட்டுமின்றி ரவி மோகனின் அம்மாவும் கலந்து கொண்டார். இந்த நிலையில் தான் இந்த விழாவில் தான் 2 படங்களை தயாரிக்க இருப்பதாகவும், அதில் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவித்தார். மேலும், அவரது காதலியான கெனிஷா பிரான்சிஸ் பற்றியும் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அதில், கெனிதா தான் தனக்கு கடவுள் கொடுத்த பரிசு. ஒரு கட்டத்தில் அப்படியே ஸ்டக்காகி நிற்கும் போது கடவுள் பொருளாகவோ, வாகனமாகவோ ஏதாவது ஒன்றை அனுப்பி வைப்பார். ஆனால், எனக்கு அவர் கொடுத்த பரிசு தான் கென்.

அவர் மட்டும் இல்லை என்றால் இந்த இடத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறாது. என்னுடைய சொத்து எல்லாவற்றையும் முடக்கியதாக சொன்னாங்க. ஆனால், உண்மையில் உண்மையான சொத்து என்றால் அது நீங்கள் தான். உங்களுடைய உண்மையான அன்பை நான் சம்பாதிச்சிருக்கிறேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.

ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ள 2 படங்களில் ஒன்றை கார்த்திக் இயக்குகிறார். இப்படத்திற்கு Bro Code என பெயரிட்டுள்ளனர். இதில் ரவி மோகன் ஹீரோவாக நடிக்க அவருடன் எஸ்.ஜே.சூர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கிறார்கள். இதையடுத்து அவர் தயாரிப்பில் உருவாக உள்ள மற்றொரு படத்தின் பெயர் An Ordinaru Man. இப்படத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி இதன்மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார் ரவி மோகன். இந்த இரண்டு படத்திற்கான பூஜையும் இன்று போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.