- Home
- Cinema
- சினிமா நடிகைகளையே மிஞ்சிருவாங்க போல... ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி நடத்திய செம்ம ஹாட் போட்டோஷூட் வைரல்
சினிமா நடிகைகளையே மிஞ்சிருவாங்க போல... ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி நடத்திய செம்ம ஹாட் போட்டோஷூட் வைரல்
சினிமா நடிகைகளை மிஞ்சும் வகையில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி நடத்தியுள்ள ஹாட் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. இவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளன.
ஜெயம் ரவியின் மூத்த மகனான ஆரவ், சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்தில் அவருக்கு மகனாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு விருதுகளும் கிடைத்தன.
விரைவில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும் சினிமாவில் நடிக்க வரப்போகிறாரோ என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழத்தொடங்கி உள்ளது. இதற்கு காரணம் ஆர்த்தி ரவி சமீபகாலமாக நடத்தி வரும் போட்டோஷூட் தான்.
இதையும் படியுங்கள்... பிரபாஸின் ரூ.600 கோடி பிரம்மாண்டம் அசர வைத்ததா? அப்செட் ஆக்கியதா?.. ஆதிபுருஷ் படத்தின் டிரைலர் எப்படி இருக்கு?
சினிமா நடிகைகை மிஞ்சும் வகையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஏன் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கக் கூடாது என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியில் இந்த செம்ம ஹாட் போட்டோஷூட்டை பார்த்து சினிமா நடிகைகளும் வாயடைத்துப் போய் உள்ளனர்.
குறிப்பாக நடிகை குஷ்பு, ஆர்த்தியின் போட்டோக்களை பார்த்து ஸ்டன்னிங் என கமெண்ட் செய்துள்ளதோடு பயர் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களாக பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ஸ்ரேயா, ஆர்த்தி ரவியின் போட்டோ பார்த்து போட கமெண்ட் தான் ஹைலைட். அவர் ஆர்த்தி செம்ம ஹாட்டாக இருப்பதாக கமெண்ட்டில் பதிவிட்டு உள்ளார்.
இதையும் படியுங்கள்... ‘விடாமுயற்சி’க்காக உலக சுற்றுலாவை பாதியில் நிறுத்திய அஜித்... மீண்டும் தொடங்குவது எப்போது?