ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படமான ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லரை படக்குழு அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்துள்ளது.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர நடிகர் பிரபாஸ் தேர்ந்தெடுத்த திரைப்படம் தான் ஆதிபுருஷ். இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சீதை கேரக்டரில் கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார்.

ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இப்படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீசர் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி கடும் விமர்சனங்களை சந்தித்தது. அந்த டீசரை பார்ப்பதற்கு கார்ட்டூன் படம் பார்ப்பது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர்.

இதையும் படியுங்கள்... போட்ட பிளான் எல்லாம் வேஸ்டா போச்சே.. திருட்டுத்தனமாக இணையத்தில் லீக் ஆன ஆதிபுருஷ் டிரெய்லர் - ஷாக்கான படக்குழு

இதனால் அப்செட் ஆன படக்குழு மேலும் ரூ.100 கோடி பட்ஜெட்டில் வி.எப்.எக்ஸ் பணிகளை மேம்படுத்தினர். அந்த வகையில் மேம்படுத்தப்பட்ட வி.எப்.எக்ஸ் காட்சிகளுடன் தயாராகி உள்ள ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது ரிலீஸ் செய்துள்ளது. இந்த டிரெய்லர் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை என்றாலும் டீசரோடு ஒப்பிடுகையில் இது நன்றாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

ஆதிபுருஷ் படம் வருகிற ஜூன் மாதம் 16-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் பெரியளவில் ரசிகர்களை ஈர்க்காததால், இது ரூ.1000 கோடி வசூலை எட்டுமா அல்லது பிரபாஸுக்கு ஹாட்ரிக் தோல்வி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Adipurush (Official Trailer) Tamil | Prabhas | Kriti Sanon | Saif Ali Khan | Om Raut | Bhushan Kumar

இதையும் படியுங்கள்... ‘விடாமுயற்சி’க்காக உலக சுற்றுலாவை பாதியில் நிறுத்திய அஜித்... மீண்டும் தொடங்குவது எப்போது?