- Home
- Cinema
- பிளாஷ்பேக் : மனைவி ஆர்த்திக்காக ஜெயம் ரவி பாடிய சூப்பர் ஹிட் பாடல் பற்றி உங்களுக்கு தெரியுமா?
பிளாஷ்பேக் : மனைவி ஆர்த்திக்காக ஜெயம் ரவி பாடிய சூப்பர் ஹிட் பாடல் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி இடையே விவாகரத்து விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ஆர்த்திக்காக ஜெயம் ரவி பாடிய பாடல் பற்றி பார்க்கலாம்.

Jayam Ravi Sing a Song For Aarti
நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஆரவ், ஜெயம் ரவி உடன் சேர்ந்து டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார். அதிலும் ஜெயம் ரவியின் மகனாகவே நடித்திருந்தார் ஆரவ். 17 ஆண்டுகள் காதலோடு சேர்ந்து வாழ்ந்த ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடி கடந்த ஆண்டு திடீரென தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்தனர். இது திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து
ஆர்த்தி - ஜெயம் ரவி ஜோடியின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தான் ஜெயம் ரவி உடன் சேர்ந்து வாழ விரும்புவதாக ஆர்த்தி தெரிவித்தாலும், ஜெயம் ரவி விவாகரத்து முடிவில் தீர்க்கமாக உள்ளார். இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு ஒருவரை ஒருவர் சாடி வருகின்றனர். தங்களுக்கு பிரிவு ஏற்பட்டதற்கு மூன்றாவது நபர் தான் காரணம் என கெனிஷாவை மறைமுகமாக சாடி ஆர்த்தி அண்மையில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி
இதனிடையே ஜெயம் ரவியிடம் ஆர்த்தி மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளாராம். இதுதொடர்பாக ஜூன் 15ந் தேதிக்குள் பதிலளிக்க நடிகர் ஜெயம் ரவிக்கு குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஆர்த்தி தன்னை ஒரு தங்க முட்டையிடும் வாத்தாக பயன்படுத்தி வந்ததாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில், மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல் செய்துள்ளதால் அது கோலிவுட் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.
ஆர்த்திக்காக ஜெயம் ரவி பாடிய பாடல்
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி உடன் ஜோடியாக ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார். அதில் மகனுக்கும் மனைவிக்கும் டெடிகேட் செய்ய விரும்பும் பாடல் என்ன என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு மகனுக்கு குறும்பா பாடல் என்று பதிலளித்த ஜெயம் ரவி, மனைவிக்கு முன்பே வா பாடலை டெடிகேட் செய்தார். பின்னர் உங்கள் பட பாடலில் ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் என ஆர்த்தி கேட்டவுடன், தீபாவளி படத்தில் இருந்து ‘காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்’ என்கிற பாடலை தன் குரலில் பாடி டெடிகேட் செய்தார். தன் மனைவிக்காக அவர் பாடிய முதல் பாடல் இதுவாகும்.