- Home
- Cinema
- நாயகன் 2-ம் பாகத்தில் நடிக்கனும்... மனதில் இருந்த ஆசையை பொன்னியின் செல்வன் மேடையில் கொட்டிய ஜெயம் ரவி
நாயகன் 2-ம் பாகத்தில் நடிக்கனும்... மனதில் இருந்த ஆசையை பொன்னியின் செல்வன் மேடையில் கொட்டிய ஜெயம் ரவி
கோவையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ஜெயம் ரவி நாயகன் 2-ம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெறது.. இதில் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்திக், மற்றும் நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சயில் பங்கேற்ற நடிகர் ஜெயம் ரவி நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதாவது : “மிருதன் படத்திற்காக கோவை வந்தபோது , ஜோம்பிகள் இடையே படப்படிப்பு முடிந்தவுடன் நிறைய பேர் வந்த்தும் அதை பார்த்து தான் பயந்த்தையும் நினைவுகூர்ந்தார். மேலும் கோவை தனக்கு இரண்டாவது வீடு என கூறலாம் எனவும் அவ்வளவு பிடிக்கும், வைப், அன்பாக பார்க்கும் மக்கள், எந்த எதிர்மறையையும் பார்க்கமுடியாது. அவ்வளவு வைப் இருக்கிறது கோவையில் என தெரிவித்த ஜெயம்ரவி, கோவை மக்களிடமிருந்து நிறைய கற்று கொள்ளணும், ஒரு ஊரு என்பது நிறைய கற்று கொடுக்கும். கோவை தனக்கு நிறைய கற்று கொடுத்துள்ளது. நிறைய கற்று கொள்ள போகிறேன் எனவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... அடிச்சா கோல்டு தான்... சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கங்களை வென்றுகுவித்த மாதவனின் 'தங்க'மகன் வேதாந்த்
பொன்னியின் செல்வன் படத்தை வேறு எந்த படத்துடன் ஒப்பிட வேண்டாம் எனக்கூறிய ஜெயம்ரவி , இரண்டாம் பாகத்துடன் ஒப்பிடுங்கள் என தெரிவித்தார். எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தபடம், எவ்வளவு தேவையான படம்னு ரசிகர்களுக்கு புரியும் எனவும் இங்குள்ள பெண்கள் தான் என்னை காப்பாற்ற வேண்டும், பெத்தது சோறுபோட்டது அம்மா, அன்பு கொடுத்தது அக்கா, மனைவி உயிருக்கு உயிராக பார்த்திருக்கிறவர் என கூறிய ஜெயம்ரவி, மனைவிகிட்ட இருந்து ஆண்டவன் தான் காப்பற்ற வேண்டும், மாட்டிக்காம இருக்கிறது என்ன வழியோ அதை பாருங்க என நகைசுவையாக பேசினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் ஜெயம் ரவி மணிரத்தினத்தின் நாயகன் இரண்டாம் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும், மணிரத்தினம் படத்தின் இருவர் தனக்கு பிடித்தபடம், மணி சார் மேட் இருவர்: நாயகன் மேட் மணி சார் என தெரிவித்தார். மேலும் பொன்னியில் செல்வன் படத்தில் நடத்த நடிகர்ரகள் தொடர்பான தொகுப்பாளரின் கேள்விகளுக்கு பூங்குழலி அந்த கேரேட்டராகவே மாரிட்டாங்க. Never give up attitude என்பது பூங்குழலியிடம் பிடிக்கும், வந்தியதேவனின் confidence தனக்கு பிடிக்கும் எனவும் அசால்டா இருப்பாங்க, இதுவா இதுவா என்று கேட்டு மயக்கிட்டு போய்ட்டே இருப்பாங்க த்ரிஷா எனவும் தெரிவித்தவர் சினிமா குருவும் அப்பா தான், அப்பாவும் அப்பாதான், அப்பாவிடம் எதுவும் மீறமுடியாது என அப்போது பதிலளித்தார்.
இதையும் படியுங்கள்... Trisha : ‘குந்தவை’னு பெயர் மாத்துனது குத்தமா..! திரிஷாவில் ப்ளூ டிக்-ஐ பறித்த டுவிட்டர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.