டுவிட்டரில் ப்ளூ டிக் பறிக்கப்பட்ட விவகாரம்... முதன்முறையாக மனம்திறந்து பேசிய திரிஷா - ஜெயம் ரவி
டுவிட்டரில் பெயரை மாற்றியதற்காக திரிஷா மற்றும் ஜெயம் ரவியின் ப்ளூ டிக் பறிக்கப்பட்ட விவகாரம் குறித்து இருவரும் முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சி உள்ளதால், அதன் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொன்னியின் செல்வன் 2 படத்தை புரமோட் செய்து வருகின்றனர். இதுதவிர சமூக வலைதளங்களிலும் இப்படத்திற்கான புரமோஷன் படு ஜோராக நடக்கிறது.
கடந்தாண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆனபோது கார்த்தி டுவிட்டரில் தனது பெயரை வந்தியத்தேவன் என மாற்றினார். அதேபோல் திரிஷா குந்தவை எனவும், விக்ரம் ஆதித்த கரிகாலன் எனவும், ஜெயம் ரவி அருண்மொழி வர்மன் எனவும் தங்களது பெயர்களை டுவிட்டரில் மாற்றிக்கொண்டனர். அது ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்றது.
இதையும் படியுங்கள்... நயன்தாரா தான் வேணும்..! பக்கா பிளான் போட்ட இயக்குனர்... கமலுக்கு ஜோடியாகிறாரா லேடி சூப்பர் ஸ்டார்?
அதேபோல் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திற்காகவும் பெயரை மாற்ற முடிவு செய்து முதலில் திரிஷாவும், ஜெயம் ரவியும் தங்களது பெயர்களை குந்தை, அருண்மொழி வர்மன் என மாற்றினர். அவர்கள் பெயரை மாற்றியதும் அவர்களது ப்ளூ டிக் பறிக்கப்பட்டது. இதனால் உஷாரான கார்த்தியும், விக்ரமும் தங்களது பெயரை மாற்றவில்லை.
இந்நிலையில், இந்த ப்ளூ டிக் பறிக்கப்பட்ட விவகாரம் குறித்து திரிஷாவும் ஜெயம் ரவியும் புரமோஷன் நிகழ்ச்சியின் போது மனம்விட்டு பேசியுள்ளனர். அதன்படி படத்தின் புரமோஷனுக்காக தான் பெயரை மாற்றியதாகவும், விருப்பப்பட்டு பெயரை மாற்றி ப்ளூடிக்கை இழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அதனை மீட்டெடுக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... ரெட் ஜெயண்ட் சொத்து மதிப்பு ரூ.2000 கோடியாம்... என்னென்ன சொல்றாங்க பாருங்க - உதயநிதி கலகல பேச்சு