- Home
- Cinema
- ஆர்த்திக்கு துரோகம்? பாடகியுடன் கோவாவில் தனி குடித்தனம்.. ஆடி காரால் பிடிபட்ட ஜெயம் ரவி நடந்தது என்ன?
ஆர்த்திக்கு துரோகம்? பாடகியுடன் கோவாவில் தனி குடித்தனம்.. ஆடி காரால் பிடிபட்ட ஜெயம் ரவி நடந்தது என்ன?
நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து விவகாரம், கோலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக இருக்கும் நிலையில், இவர்களது விவாகரத்துக்கு காரணம் பிரபல பாடகி கெனிஷா என்பவர் தான் என்கிற புது தகவல் தீயாக பரவி வருகிறது. இது குறித்து பல்வான் ரங்கநாதன் போன்ற சினிமா விமர்சகர்கள் என்ன கூறி உள்ளனர்? என்பதை பார்க்கலாம்.

Actor Jayam Ravi
ஜெயம் ரவி தன்னுடைய கல்லூரியில் படித்த ஆர்த்தி என்கிற கோடீஸ்வர வீட்டு பெண்ணை, உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன பின்னர், ஜெயம் ரவி - ஆர்த்தி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது விவாகரத்து வரை வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்த்தி தன்னுடைய விவாகரத்து குறித்து எந்த ஒரு முடிவையும் அறிவிக்காத முன்பே... முந்திக்கொண்டு தன்னுடைய விவாகரத்து முடிவை தெரிவித்தார் ஜெயம் ரவி. மேலும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் ஒன்றையும் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Jayam Ravi Divorce
இதைத்தொடர்ந்து ஆர்த்தி தரப்பில் இருந்து பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியானது. அதில் தன்னுடைய கணவர் ரவியை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் தான் தடுக்கப்பட்டதாகவும், நானும் தன்னுடைய குழந்தைகளும் ரவியின் இந்த முடிவால் என்ன செய்வது என புரியாமல் தவித்து வருவதாக ஆதங்கத்தை கொட்டி இருந்தார். இது முழுக்க முழுக்க ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு என்பதை உறுதி செய்த ஆர்த்தி.. தன்னுடைய நடத்தை குறித்து சில விவாதங்கள் வரும்போது, அதற்கு பதில் அளிக்க வேண்டியது அவசியமானது என்றும், இந்த நேரத்தில் தன்னுடைய பிள்ளைகளுக்கு ஒரு தாயாக உறுதுணையாக நிற்க வேண்டிய தருணம் என்பதை கூறியிருந்தார். ஆர்த்தியின் இந்த வார்த்தையில் உண்மை இருப்பதாக பலர் கூறி வந்தாலும், ஆர்த்தி ஜெயம்ரவியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியதன் பின்னணி என்ன? என சிலர் கேள்வி எழுப்பியதையும் பார்க்க முடிந்தது.
Jayam Ravi Aarthi Marriage Photos
நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பின்னர் தற்போது வரை எந்த ஒரு முடிவையும் தெரிவிக்காத நிலையில், பாடகி கெனிஷா என்பவருடன் ஜெயம் ரவி வைத்துள்ள தொடர்பு தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என பல தகவல்கள் வெளியானது. நடிகர் ஜெயம் ரவி அண்மைக்காலமாக அடிக்கடி கோவாவுக்கு சென்று தன்னுடைய வெக்கேஷன் நாட்களை கழித்துள்ளார். அதேபோல் கடந்த ஜூன் மாதம் 4-ஆம் தேதி, அதாவது ஜெயம் ரவி - ஆர்த்தியின் திருமண நாள் அன்று கூட ஜெயம் ரவி ஆர்த்தியுடனும், குடும்பத்தினருடனும் இல்லையாம். கடந்த 14 வருடங்களாக திருமண நாள் அன்று, எந்த ஒரு சூட்டிங் என்றாலும் அதனை புறக்கணித்துவிட்டு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்துடன் இருப்பது இவரது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு ஜெயம் ரவி ஷூட்டிங்கில் இருப்பதாக கூறியுள்ளார்.
Actor Jayam Ravis Brother film release updates
அந்த சயமத்தில் தான் ஜெயம் ரவி, ஆர்த்தி பேரில் வாங்கிய அடி காரில்... தடை செய்யப்பட்ட கருப்பு நிற சன் ஃபில்டர் பேப்பர் ஒட்டப்பட்டதாக கூறி, Fine போட்டுள்ளனர் போலீசார். இது ஆர்த்தியின் பெயரில் வாங்கிய கார் என்பதால், நேரடியாக அவருக்கு தான் SMS சென்றுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்து ஷூட்டிங் என கூறி விட்டு கோவா சென்றது ஏன் என பல கேள்விகள் கேட்டு ஆர்த்தி சண்டை போட்டாராம். பின்னர் யாருடன் ஜெயம் ரவி அங்கு இருந்தார் என்பதை... ஆர்த்தி தனக்கு தெரிந்தவர்கள் மூலம் விசாரித்த போது கெனிஷாவின் பெயர் அடிபட்டுள்ளது. அந்த சமயத்தில் கெனிஷா மட்டும் தன்னுடன் இல்லை... பல நண்பர்கள் இருந்ததாக கூறி சமாதானம் செய்துள்ளார் ஜெயம் ரவி . இந்த பிரச்சனை ஓய்ந்த 10 நாட்களில் மற்றொரு பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது.
kenishaa
ஜூன் 24ஆம் தேதி, ஆர்த்தியின் செல்ஃபோனுக்கு ஜெயம் ரவி பயன்படுத்தும் கார் போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகத்தில் சென்றதாக SMS வர காரை ஓட்டி சென்றது கெனிஷா என்பதும் தெரியவந்ததாம். ஜெயம் ரவி மீது ஏற்கனவே கோவத்தில் இருந்த ஆர்த்தி, கணவருடன் எடுத்த அணைத்து புகைப்படங்களையும் அப்போது தான் டெலீட் செய்தாராம். மேலும் நேரடியாக கோவாவுக்கு சென்று விசாரித்த போது, ஜெயம் ரவி எப்போதும் கோவா வந்தால்... வழக்கமாக தங்கும் ஓட்டலில் தங்காமல், இருந்ததும் தெரியவந்தது. அதே போல் பாடகி கெனிஷா என்பவருடன் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி ஜெயம் ரவி குடும்பம் நடத்தி வருவதாக சில தகவல்கள் வெளியான போதிலும்... இதுவரை அந்த தகவல்கள் ஏதும் உறுதி செய்யப்படவில்லை.
புதிய தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து 52-வது படத்திற்கு அஸ்திவாரம் போட்ட தனுஷ்!
Jayam Ravi and Aarti
அண்மையில் பிரபல யூடியூப் பக்கத்தில் பேசிய, பயில்வான் ரங்கநாதன்... சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் ஆடியோ ஒன்றில் கூறியுள்ள தகவலை தெரிவித்துள்ளார். ஆர்த்திக்கும், ஜெயம் ரவிக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டு தான் இருக்குமாம். அப்படி சண்டை வரும் போதெல்லாம்.. ஜெயம் ரவிக்கு ஆதரவாக மட்டும் தான் சுஜாதா பேசுவாராம், காரணம் ஜெயம் ரவி அமைதியானவர் நிதானமானவர். ஆனால் ஆர்த்தி எதுக்கெடுத்தாலும் உடனே கோவப்படும் பெண் என்பதால். அதே போல் இவர்களின் வாழ்க்கையில் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்பதை கனவில் கூட நினைக்கவில்லை என தெரிவித்திருந்ததை குறிப்பிட்டிருந்தார்.
அதே போல் ஜெயம் ரவி குறித்து, பாடகி கெனிஷாவை இணைத்து பல சர்ச்சைகள் எத்தனையோ வந்தாலும்... இவர்கள் இருவரும் கண்டிப்பாக தங்களின் குழந்தைகளுக்காக மீண்டும் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் பாசிட்டிவாக பேசியுள்ளார். இதற்கான பேச்சு வார்த்தைகள் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும்... ஜெயம் ரவி விவாகரத்து விவகாரம் எப்படி முடிய போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா நடிகைகளின் Xerox போல் இருக்கும் 7 சீரியல் ஹீரோயின்கள்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.