MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அவர் கலர பாருங்க; அவரோடு என் பொண்ணு நடிக்க மாட்டா! பிரபல ஹீரோவை அவமானப்படுத்திய ஜெயலலிதாவின் தாய்?

அவர் கலர பாருங்க; அவரோடு என் பொண்ணு நடிக்க மாட்டா! பிரபல ஹீரோவை அவமானப்படுத்திய ஜெயலலிதாவின் தாய்?

ஜெயலலிதா சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் பிரபல நடிகருடன் நடிக்க வந்த வாய்ப்பை அவரது தாயார் நிறத்தை சுட்டிக்காட்டி நிராகரித்து இருக்கிறார்.

3 Min read
Author : Ganesh A
Published : Nov 11 2024, 09:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Sobhan Babu, Jayalalitha

Sobhan Babu, Jayalalitha

தெலுங்குத் திரையின் காதல் நாயகனாக வலம் வந்தவர் சோபன் பாபு. சொக்காடு படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான சோபன் பாபுவுக்கு அப்படத்தின் மூலம் நிறைய பெண் ரசிகைகளும் கிடைத்தனர். அதன் பின்னர் அந்த காலத்து சாக்லேட் பாய் ஆக தெலுங்கு திரையுலகில் வலம் வந்தார் சோபன் பாபு. மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்தவரான சோபன் பாபு, நாடகங்களில் நடித்து தன்னுடைய திறமையை மெருகேற்றிக் கொண்டார். பின்னர் சினிமாவுக்குள் நுழைந்த சோபன் பாபு சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Sobhan Babu

Sobhan Babu

குறிப்பாக என்.டி.ஆர் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்த சோபன் பாபு, படிப்படியாக ஹீரோவாக உயர்ந்தார். பின்னர் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து காதல் நாயகனாக உருவெடுத்தார் சோபன் பாபு. அவர் ஹீரோவானதற்கு முன் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறார். அதில் ஒரு சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

37
Actor Sobhan Babu

Actor Sobhan Babu

சோபன் பாபு மிகவும் நேசித்த, மதித்த நடிகைகளில் ஜெயலலிதாவும் ஒருவர். ஆனால் அவரின் தாயாரால் சோபன் பாபு அவமானப்படுத்தப்பட்டுள்ளார். அதுவும் சாதாரணமாக அல்ல, நிறத்தை சுட்டிக்காட்டி அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான கிருஷ்ணா நடித்த முதல் துப்பறியும் படம் `குடாச்சாரி 116`. இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தது சோபன் பாபு தான். இதில் சோபன் பாபுவுக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தனர். ஜெயலலிதா அப்போதுதான் சினிமாவிற்குள் நுழைந்து படிப்படியாக வளர்ந்து வந்தார்.

47
Sobhan Babu vs Jayalalitha

Sobhan Babu vs Jayalalitha

ஆனால் அவரது தாயார் சந்தியா பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் சற்று ஆதிக்கத்தோடு இருந்தார். `குடாச்சாரி 116` படப்பிடிப்புத் தளத்திற்கு ஜெயலலிதாவுடன் அவரது தாயாரும் வந்தார். கதாநாயகன் யார் என்று கேட்டதும், சோபன் பாபுவை தயாரிப்பாளர் காட்டி இருக்கிறார். அப்போது எதோ வேலை செய்துவிட்டு வந்த சோபன் பாபு முகத்தில் எண்ணெய் வழிய, வெயிலில் சற்று நிறம் குறைவாகக் காணப்பட்டார். சோபன் பாபுவைப் பார்த்த ஜெயலலிதாவின் தாயார், "என் மகளின் நிறம் என்ன? அவரது நிறம் என்ன? அவர் ஜோடியாக என் மகள் நடிப்பதா?" என்று காட்டமாக பேசி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... அடேங்கப்பா... ஜெயலலிதா சொந்த குரலில் இத்தனை சூப்பர் ஹிட் பாடலை பாடி இருக்கிறாரா?

57
Sobhan Babu revenge

Sobhan Babu revenge

ஹீரோவை மாற்றினால் மட்டுமே என் மகள் நடிப்பார், இல்லையென்றால் வேறு கதாநாயகியைப் பாருங்கள் என்று கறாராக கூறி இருக்கிறார். அதுவும் சோகன் பாபு முன்னிலையிலேயே அவர் இப்படி பேசி இருக்கிறார். ஹீரோ ஆகிவிட்டோம் என்கிற உற்சாக மிகுதியில் இருந்த சோபன் பாபுவுக்கு ஜெயலலிதா தாய் சொல்லிய சொல் பேரிடியாக அமைந்தது. அதன்பின்னர் வேறுவழியின்றி அப்படத்தில் இருந்து சோபன் பாபுவை நீக்கிவிட்டு கிருஷ்ணாவை நடிக்க வைத்திருக்கின்றனர்.

67
Telugu Actor Sobhan Babu

Telugu Actor Sobhan Babu

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா தன்னை அவமானப்படுத்தி பேசிய வார்த்தைகள், சோபன் பாபுவின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அதன்பின்னர் தன்னுடைய விடாமுயற்சியால் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்து பெரிய வெற்றிகளைப் பெற்றார் சோபன் பாபு. தனக்கு யார் வாய்ப்பு தருவார்கள் என்ற நிலையில் இருந்து, தனது கால்ஷீட்டுக்கு தயாரிப்பாளர் காத்திருக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

இந்தச் சூழலில் தம்மாரெட்டி பாரத்வாஜ் ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்தார். சோகன் பாபு கதாநாயகன். அதில் கதாநாயகி தேர்வு செய்யப்படாமல் இருந்த நிலையில், ஜெயலலிதா என்ற புதிய பெண் நன்றாக நடிப்பார் என்று படக்குழுவிடம் பரிந்துரை செய்திருக்கிறார் சோபன் பாபு.

77
Sobhan Babu

Sobhan Babu

அந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கும் சோபன் பாபு மீது ஒரு சாஃப்ட் கார்னர் ஏற்பட்டு அவரும் நடிக்க சம்மதித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். சோபன் பாபுக்கு ஏற்கனவே மனைவி, குழந்தைகள் இருந்தபோதும் அவர் மீது ஜெயலலிதாவுக்கு ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது. இப்படி தன்னை அவமானப்படுத்தியவரையே தன் பின்னால் வர வைத்து அவரை சோபன் பாபு பழிவாங்கியதாக மூத்த பத்திரிகையாளர் இம்மண்டி ராமராவ் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... பிளாஷ்பேக் : கருப்பு பணம் வாங்கிய ரஜினிகாந்த்... கண்டுபிடித்த ஜெயலலிதா - சூப்பர்ஸ்டார் கொடுத்த நச் விளக்கம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved