MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடேங்கப்பா... ஜெயலலிதா சொந்த குரலில் இத்தனை சூப்பர் ஹிட் பாடலை பாடி இருக்கிறாரா?

அடேங்கப்பா... ஜெயலலிதா சொந்த குரலில் இத்தனை சூப்பர் ஹிட் பாடலை பாடி இருக்கிறாரா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், மக்களின் முதல்வராகவும் தமிழகத்தை ஆட்சி செய்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய சொந்த குரலில் பாடிய பாடல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

3 Min read
manimegalai a
Published : Oct 23 2024, 04:04 PM IST| Updated : Oct 23 2024, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Jayalalithaa

Jayalalithaa

சிறு வயதில் இருந்தே நன்றாக படிக்க வேண்டும் என்கிற ஆசை ஜெயலலிதாவுக்கு உண்டு.  தன்னுடைய அம்மா சந்தியா மூலம்  Epistle என்கிற ஆங்கில படத்தில் குழந்தை நட்சத்திரமாக  நடிக்கும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து, கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் உருவான படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், டான்சராகவும் நடித்தார்.
 

27
Jayalalithaa Movies

Jayalalithaa Movies

ஜெயலலிதா கல்லூரியில் சேர முயற்சி செய்துகொண்டிருந்த நேரத்தில் தான் தெலுங்கில் இவரை ஹீரோயினாக வைத்து எடுக்கப்பட்ட படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. பின்னர் தமிழில் 'வெண்ணிற ஆடை' படத்தில் அறிமுகமான ஜெயலலிதா ஒரு சில படங்களில் நடித்து விட்டு மீண்டும் படிப்பை தொடரலாம் என விரும்பினார். ஆனால் ஜெயலலிதாவை தன்னுடைய படங்களில் MGR ஹீரோயினாக நடிக்க வைத்து அழகு பார்த்தார். மேலும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா முதல் முதலாக இணைந்து நடித்த, 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது.

250 கோடி சொத்துக்காக 4வது திருமணம் செய்துகொண்டாரா பாலா?
 

37
Jayalalithaa Cinema Carrier

Jayalalithaa Cinema Carrier

இதை தொடர்ந்து MGR மற்றும் ஜெயலலிதா இருவரும் சேர்ந்து, மொத்தம் 28 படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தனர். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. அதே போல் 60-களில் பிரபலமாக இருந்த சிவாஜி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவக்குமார், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். திரை உலகை விட்டு மீள முடியாமல் தன்னுடைய கனவை திரையுலகிலேயே தொலைத்தார். 

47
Jayalalithaa sung Songs

Jayalalithaa sung Songs

ஜெயலலிதாவுக்கு தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்த போதிலும்,  ஒரு கட்டத்தில் பிரபல தெலுங்கு நடிகர்  ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக இருந்த போது, ஜெயலலிதா வாழ்க்கையில் வீசிய அரசியல் அலை காரணமாக... மக்கள் சேவைக்காக எம்ஜிஆரின் வழிகாட்டுதலோடு அரசியலில் இறங்கி, கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய இறுதி மூச்சு வரை மக்கள் பணி ஆற்றினார்.

ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த அம்மா உணவகம், மருந்தகங்கள், உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்கள் இன்று வரை செயல்பாட்டில் இருந்து வருகிறது.

அஜித்தின் வெற்றியால் வயித்தெரிச்சல்? வேறு ஒரு ஹீரோவுக்கு எழுதிய கதையை ஆட்டையை போட்டு நடித்த விஜய்!

57
Jayalalithaa Super Hit Songs

Jayalalithaa Super Hit Songs

தமிழில் சுமார் 140 படங்களின் நடித்துள்ள ஜெயலலிதா, சில படஙக்ளில் இடம்பெற்ற பாடல்களை அவரே பாடி உள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா. தன்னுடைய இனிமையான குரலால், ஜெயலலிதா பாடிய பாடல்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஜெயலலிதா பாடிய பாடல்கள்:

இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில், எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'அடிமை பெண் படத்தில்'  வாலி வரிகளில், கே.வி.மஹாதேவன் இசையில் இடம்பெற்ற அம்மா என்றால் அன்பு.... என தொடங்கும் பாடலை ஜெயலலிதா தான் பாடி இருந்தார்.

அதே போல், இயக்குனர் முக்தா ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், முத்துராமனுக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்த திரைப்படம் 'சூர்யா காந்தி'. இந்த படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற  ஓ மேரி தில் ரூபா.... என்கிற பாடலையும் நான் என்றால் அது அவளும் என்கிற பாடலை எஸ்.பி.பி-யுடன் இணைந்து பாடி இருந்தார்.

67
Jayalalithaa And SPB Songs

Jayalalithaa And SPB Songs

கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில், ஜெய் ஷங்கர் ஜோடியாக ஜெயலலிதா நடித்த படம் 'வந்தாலே மகராசி' இந்த படத்தில், ஷங்கர் கணேஷ் இசையில் இடம்பெற்ற , கண்களில் ஆயிரம்... என்கிற பாடலை பாடி உள்ளார்.

ஜெய் ஷங்கருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்த திரைப்படமான, 'வைரம்' படத்திலும், டி.ஆர்.பாப்பா இசையில், எஸ்.பி.பி-யுடன் இணைந்து இரு மாங்கனி போல்.... என்கிற ஹிட் பாடலை பாடி இருந்தார்.

இயக்குனர் முத்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில், வெளியான 'அன்பைத்தேடி படத்தில்' எம்.எஸ்.வி இசையில் இடம்பெற்ற சித்திர மண்டபத்தில்..... என தொடங்கும் பாடலை பாடி இருந்தார்.

சிறுத்தை சிவா தம்பி; நடிகர் பாலாவுக்கு எளிமையாக நடந்த 4-வது திருமணம் - மணமகள் யார் தெரியுமா?

77
Jayalalithaa Devotional Songs

Jayalalithaa Devotional Songs

இயக்குனர் ஏ.வின்சென்ட் இயக்கத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்த, 'திருமாங்கல்யம்' படத்திலும், திருமாங்கல்யம் கொள்ளு முறை..... என்கிற பாடலையும்  பொற்குடத்தில் பொங்கும் எழில் சுவையோ... என்கிற பாடல்களையும் பாடி இருந்தார்.

அதே போல் உன்னை சுற்றும்  உலகம்  படத்தில் - மெட்ராஸ் மைல் போன்ற பாடல்களை பாடியுள்ள ஜெயலலிதா, குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் 'மாரி வரும் உலகினிலே' 'மாரியம்மா முத்து மாரியம்மா' , 'காளி மகமாயி ', 'தங்க மயிலேறி வரும் எங்கள் வடிவேலவன்', போன்ற ஏராளமான பக்தி பாடல்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.   

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
எம்.ஜி.ஆர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved