- Home
- Cinema
- ஒரு வழியா கைப்பற்றியாச்சு..! 16 வருட போராட்டத்திற்கு பின் நிம்மதியடைந்த நடிகை ஜெயசித்ரா..!
ஒரு வழியா கைப்பற்றியாச்சு..! 16 வருட போராட்டத்திற்கு பின் நிம்மதியடைந்த நடிகை ஜெயசித்ரா..!
நடிகை ஜெயசித்திராவிற்கு சொந்தமான வீட்டில், கடந்த 16 ஆண்டுகளாக வாடகைக்கு இருந்த இளமுருகன் என்பவர் வாடகை கொடுக்காமல் இருந்து வருவதாக நீதிமன்றத்தில் நடிகை ஜெயசித்ரா தொடர்ந்த வழக்கில் தற்போது இவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகி, குணச்சித்திர நடிகை, தயாரிப்பாளர் என உயர்ந்தவர் ஜெயசித்ரா.

இவருக்கு சொந்தமாக சென்னை கோடம்பாக்கத்தில் ரங்கராஜபுரம் பாஸ்கர தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ள ஜெயசித்ரா, அதனை மீட்க சுமார் 16 வருடங்களாக நீதி மன்றத்தின் மூலம் போராடி வந்தார்.

இளம்முருகன் என்பவர், தனது வீட்டை அபகரிக்க முயற்சி செய்து வருவதாகவும், இதுதொடர்பாக கடந்த 13 ஆண்டுகளாக போராடி வருகிறேன் என, 2018 ஆம் ஆண்டு செய்தியாளர்களை சந்தித்து பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

சுமார் 13 ஆண்டுகளாக இளமுருகன் மற்றும் அவரது மனைவி மீனா என்பவரும், சரிவர வாடகை பணம் தராமல் உள்ளதாக ஜெயசித்ரா தொடர்த்த வழக்கில், இளம்முருகன் வீட்டை காலி செய்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் அவர் காலி செய்யவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், 16 வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு, தனக்கு சொந்தமான ரங்கராஜபுரம் பாஸ்கரா தெரு கோடம்பாக்கம் வீட்டை நேற்று 01.02.2021 நீதிமன்றம் உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்புடன் ஜெயசித்ரா மீட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.