ஜெயிலர் பட வசூல் சாதனை எல்லாம் சல்லி சல்லியா நொறுங்கப்போகுது... ஆத்தாடி செப்டம்பரில் இத்தனை படங்கள் ரிலீஸா?
ஷாருக்கானின் ஜவான் முதல் பிரபாஸின் சலார் வரை செப்டம்பர் மாதம் ரிலீஸாக உள்ள படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Jailer, salaar, Jawan
ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஜெயிலர் மாதம் என சொல்லும் அளவுக்கு, அதகளம் செய்துவிட்டார் ரஜினி. ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்த இப்படம் மூன்று வாரங்களைக் கடந்தும் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம் பிற மாநிலங்களிலும் பட்டைய கிளப்பியதோடு உலகளவில் ரூ.600 கோடி வசூலை நெருங்கி வருகிறது. ஜெயிலர் படம் இம்புட்டு வசூலை வாரிக் குவித்தாலும், அதனை ஒரே மாதத்தில் முறியடிக்க செப்டம்பர் மாதத்தில் பிரம்மாண்ட படங்கள் வரிசைகட்டி காத்திருக்கின்றன. அதன் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
செப்டம்பர் 1-ந் தேதி ரிலீசாகும் படங்கள்
செப்டம்பர் 1-ந் தேதி ரிலீசாகும் பிரம்மாண்ட படம் என்றால் அது குஷி தான். விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை ஷிவா நிர்வாணா இயக்கி உள்ளார். இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர சந்தானம் நடித்த கிக், தங்கர் பச்சான் இயக்கிய கருமேகங்கள் கலைகின்றன, யோகிபாபுவின் லக்கிமேன், சரத்குமார் நடித்த பரம்பொருள் ஆகிய படங்களும் அன்றைய தினம் ரிலீஸ் ஆக உள்ளன.
செப்டம்பர் 7-ந் தேதி ரிலீசாகும் படங்கள்
செப்டம்பர் 7-ந் தேதி ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அட்லீ இயக்கியுள்ள இப்படம் தமிழ்நாட்டிலும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனுடன் அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி மற்றும் சேரனின் தமிழ் குடிமகன் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆக உள்ளன.
இதையும் படியுங்கள்... அப்பாஸ் முதல் ரேகா நாயர் வரை... பக்காவாக ரெடியான 18 பேர் - பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் லிஸ்ட் லீக்கானது
செப்டம்பர் 15-ந் தேதி ரிலீசாகும் படங்கள்
செப்டம்பர் 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுவதால், அதையொட்டி, செப்டம்பர் 15ந் தேதி விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். அதோடு ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள சந்திரமுகி 2 திரைப்படமும் திரைக்கு வர உள்ளது. பி.வாசு இயக்கியுள்ள இப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
செப்டம்பர் 28-ந் தேதி ரிலீஸாகும் படங்கள்
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள சலார் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், வில்லனாக பிருத்விராஜும் நடித்துள்ளனர். இப்படத்துடன் நடிகர் ஜெயம் ரவியின் இறைவன் திரைப்படம் திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அஹமத் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... தங்கத் தாமரை மகளே.. சிக்கென்ற கோல்டன் கலர் ஆடையில் சமந்தா - ஹார்டின் போட்டு அன்பை அள்ளிதெறிக்கும் ரசிகர்கள்!