விடுதலை 2 முதல் மோகன் லாலின் பரோஸ் வரை! இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆன படங்கள்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள முக்கிய படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
OTT Release Movies
திரைங்குகளில் வெளியாகும் படங்களை விட ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் படங்களின் எண்ணிக்கை, மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும் திரையரங்குகள் கிடைப்பது, சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை இது போன்ற பல காரணங்களால் அதிக படங்கள் ஓடிடி பக்கம் செல்கின்றன.
அப்படியே திரையரங்கிற்கு வந்தாலும் அந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு இல்லை என்றால் அந்தப் படங்களும் ஓடிடிக்கு வந்துவிடுகின்றன. ஆனால், ஹிட் படங்கள் ஓடிடிக்கு அவ்வளவு சீக்கிரம் வருவதில்லை. இந்த நிலையில் தான் இந்த வாரம் ஓடிடிக்கு வந்த மற்றும் வரும் படங்களைப் பற்றி பார்க்கலாம்.
Anand Sreebala
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்த மலையாள படம் ஆனந்த் ஸ்ரீபாலா (Anand Sreebala). க்ரைம் த்ரில்லர் கதையை கொண்ட இந்தப் படம் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்தப் படம் 18ஆம் தேதி அமேசான் பிரைம் மற்றும் மனோரமா மாக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வு பற்றி பேசி ஷாக் கொடுத்த ராஷ்மிகா மந்தனா? சாவா டிரைலர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி!
Barroz:
மோகன்லால் இயக்கி நடித்த படம் பாரோஸ். ஃபேண்டஸி கதையை மையப்படுத்திய இந்தப் படம் ஹாலிவுட் அளவிற்கு எடுக்கப்பட்ட நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மோகன்லாலே இயக்கி நடித்த படம் என்பதால் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Smile Man:
Smile Man:
இயக்குநர் ஷியா பிரவீன் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி வெளியான படம் தான் ஸ்மைல் மேன். இது சரத்குமாரின் 150ஆவது படம். முழுக்க முழுக்க ஆக்ஷன், த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தான் இந்தப் படம் நாளை 24ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
Viduthalai 2:
Viduthalai Part 2:
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியான இந்த படம் ரூ.63 கோடி வரையில் வசூல் குவித்தது. ஆனால் முதல் பாகத்தை விட வரவேற்பு பெற்றதா என்று கேட்டால் இல்லை. சினிமா ரசிகர்களை கவர்ந்த இந்தப் படம் கடந்த 19ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது.
Alangu Movie:
இயக்குநர் எஸ் பி சக்திவேல் இயக்கத்தில் குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத் ஆகியோ பலர் நடித்திருந்த படம் தான் அலங்கு. மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையிலான கதையை இந்தப் படம் பிரதிபலிக்கிறது. அதாவது அலங்கு என்ற நாய் கதையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டது. இது உண்மையில் நடந்த சம்பவத்தை இந்தப் படம் பிரதிபலிக்கிறது. இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் 19ஆம் தேதி ரிலீசானது.
அடேங்கப்பா ஜெயிலர் 2 படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா? ஏ ஆர் ரஹ்மானையே மிஞ்சிய அனிருத்!