திருப்பதியில் திருமணம்; கணவர் மற்றும் 3 குழந்தை பெற்றுக்கொண்டு அங்கேயே செட்டில் ஆக விரும்பும் ஜான்வி கபூர்!
நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தன்னுடைய திருமண ஆசையை வெளிப்படுத்தியது மட்டும் இன்றி, எங்கே திருமணம் நடக்க உள்ளது என்கிற ரகசியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
Sridevi Daughter Janhvi Kapoor
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த கையேடு பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஜான்விக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து, தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபிக்கும் இதமாக அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்து நடித்தார். அந்த வகையில் இவர் நடித்த, குஞ்சன் சக்சேனா, குட் லாக் ஜெரி, போன்ற படங்கள் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்ந்து.
Janhvi Kapoor Salary
பாலிவுட் திரையுலகில் 5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் இளம் நடிகையாக இருக்கும் ஜான்வி கபூர், கடந்த ஆண்டு தென்னிந்திய திரையுலகிலும் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்படி ஜூனியர் என்.டி.ஆர் நடித்த 'தேவரா' படத்தின் மூலம் ஜான்வி தெலுங்கில் கால் பதித்தார். இவரது அழகு, மற்றும் டான்ஸ் போன்றவை நல்ல வரவேற்பை பெற்றது. நடனத் திறமை, ஜூனியர் என்.டி.ஆர் உடனான கெமிஸ்ட்ரியும் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது.
அடேங்கப்பா ஜெயிலர் 2 படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா? ஏ ஆர் ரஹ்மானையே மிஞ்சிய அனிருத்!
Devara Movie Actress
இந்த படத்தின் இரண்டாம் பாகம், இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. தேவாரா படத்தை தொடர்ந்து, ராம் சரணுக்கு ஜோடியாக RC 16 படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தை புஜ்ஜி பாபு சனா இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
Janhvi Kapoor Personal Life
ஜான்வி கபூரின் திரையுலக வாழ்க்கை ஒருபுறம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இதை தொடர்ந்து, தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து ஜான்வி மனம் திறந்து பேசியுள்ளார்.
SK 25 படத்திற்கு சிவாஜி கணேசனின் சூப்பர் ஹிட் பட டைட்டில்! ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியான அப்டேட்!
Janhvi Kapoor Wants 3 Kids
சமீபத்தில், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூர், திருமணம் குறித்து சுவாரசியமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே தனது விருப்பம் . கணவர் மற்றும் 3 குழந்தைகளை பெற்று கொண்டு திருமலையில் செட்டில் ஆகி விட வேண்டும். அங்கு அவர்களுடன் நேரத்தைக் கழிக்க விரும்புவதாகக் கூறிஉள்ளார்.
Janhvi Kapoor Wish
தினமும் வாழை இலையில் சாதம் சாப்பிட்டு, கோவிந்தாவை கோவிந்தா என கூற விரும்புவதாக ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜான்வி கபூருக்கு திருமணம் வெங்கடேஸ்வர ஸ்வாமியை எந்த அளவுக்கு பிடிக்கும் என்பது தெரிகிறது. கடந்த சில வருடங்களாகவே அடிக்கடி ஜான்வி கபூர் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் தன்னுடைய காதலருடன் சென்று வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருமணமான இரண்டே வருடத்தில் விவாகரத்தை அறிவித்த - விஜய் பட நடிகை!