நயன்தாரா இடத்தை பிடித்த ஜான்வி கபூர்..இந்த படமும் ரீமேக் ஆகப்போகுதா?
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்த கோலமாவு கோகிலா படம் இந்தியில் ரீமேக் அக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

nayanthara
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா :
மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். தமிழில் நயனுக்கு என்ட்ரி முன்னணி ஹீரோவுடன் அமைந்தது.
nayanthara
சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடி :
அல்டிமேட் ஸ்டார் சரத்குமாருக்கு நாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் புஷ்டியாக இருந்த நயன் பின்னர் ஸ்லிம் ஆகி சூப்பர் ஸ்டாருக்கு சந்திரமுகியில் ஜோடி சேர்ந்தார். அறிமுகமே அமோகமாக அமைந்தது.
nayanthara
நாயகிகள் சார்ந்த கதை :
கதாநாயகியாக நடித்து வந்த நயன்தாரா.. தனக்கென தனிப்பாதையை வகுத்து தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்தார். அந்த வகையில் கோலமாவு கோகிலா, மாயா, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மேலும் செய்திகளுக்கு... Nayanthara : விக்னேஷ் சிவனின் நீண்ட நாள் ஆசை... சர்ப்ரைஸாக நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா
kolamavu kokila
ரசிகர்களை வென்ற கோலமாவு கோகிலா :
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் வேலைக்கு செல்லும் மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். பாவாடை சட்டை அணைந்த தேவைதையென தத்தி தத்தி பேசும் மொழிகளில் நயன் கலக்கி இருப்பார்.
kolamavu kokila
நாயகனாக யோகிபாபு :
நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் என்பதால் முன்னணி நாயகர்கள் இந்த படத்தில் கமிட் செய்யப்படவில்லை. மாறாக நகைச்சுவை நடிகர் யோகி பாபு. முக்கிய ரோலில் நடித்திருந்தார். முழுக்க நகைச்சுவை படமாக உருவானது.
kolamavu kokila
கல்யாண வயசு பாடல் :
அனிரூத் இசையில் உருவாகிய பாடல்கள் அனைத்தும் செம ஹிட் அடித்தது அதிலும் சிவகார்த்திகேயன் எழுதியிருந்த கல்யாண வயசு பாடல் இன்றளவும் பிரபலமான ஒன்றாகும். அதோடு இந்த பாடல் மூலம் தான் பாடலாசிரியரானார் எஸ்.கே.
kolamavu kokila
நெல்சனுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் :
இயக்குனர் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை இந்த படம் கொடுத்துள்ளது. இதையடுத்து டாக்டர். பீஸ்ட் என மாஸ் காட்டி வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...நயனுக்கும், விக்கிக்கும் கல்யாணமே முடிஞ்சிருச்சா?... என்ன சொல்லவே இல்ல!! - போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
kolamavu kokila
நயன்தாராவுக்கு பதில் ஜான்வி கபூர் :
தமிழில் ரசிகர்ளை வெகுவாக கவர்ந்த கோலமாவு கோகிலா படம் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது. இதில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் வலிமை தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். நேரடியாக ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக உள்ள இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.