எல்லா இடத்திலும் உன்னை தேடுறேன் மா... தாய் ஸ்ரீதேவி குறித்து பதிவிட்டு கலங்கிய ஜான்வி கபூர்
ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்னும் சில தினங்களில் வர உள்ள நிலையில், அவர்குறித்து அவரது மகள் ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்றிருந்த போது அங்கு பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு மரணமடைந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
தாயின் மரணத்திற்கு பின்னர் ஜான்வி கபூர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். அதன்படி பாலிவுட்டில் தடக், கோஸ்ட் ஸ்டோரீஸ், குட்லக் ஜெர்ரி, மில்லி போன்ற படங்களில் நடித்தார். தற்போது மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மஹி என்கிற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்காக பிரத்யேகமாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து நடித்து வருகிறார் ஜான்வி.
இதையும் படியுங்கள்...தொட்டு பேசி அத்துமீறுவார்கள்... கன்னத்தில் அறைவிடலாம்னு தோணும் - சின்னத்திரை சீண்டல்களை தோலுரித்த ஜாக்குலின்
இதுதவிர விரைவில் தென்னிந்திய திரையுலகிலும் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்க உள்ளார் ஜான்வி. அதன்படி அவர் முதன்முதலில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதுவும் டோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஜூனியர் என்.டி,ஆருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம் ஜான்வி. இதையடுத்து தமிழ் படத்திலும் அவர் எண்ட்ரி கொடுப்பார் என கூறப்படுகிறது.
இப்படி ஸ்ரீதேவி போன்றே அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் ஜான்வி, இன்ஸ்டாகிராமில் தனது தாயின் நினைவு தினம் இன்னும் சில தினங்களில் வர உள்ள நிலையில், அவர் குறித்து எமோஷனல் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் இன்னும் எல்லா இடங்களிலும் உன்னைத் தேடுகிறேன் அம்மா. உன்னை பெருமைப்படுத்தும் விதமாக நான் எல்லாவற்றையும் செய்வதாக நம்புகிறேன். நான் எங்கே சென்றாலும், என்னென்ன செய்தாலும் அது உன்னில் தான் ஆரம்பித்து முடிகிறது” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...ஆம்பளைக்கு தான் ருசியா சமைக்கனும்.. பொம்பளைக்கு தயிர்சாதமே போதும்னு சொன்னாங்க - சுஹாசினி பகிர்ந்த ஷாக் சம்பவம்