- Home
- Cinema
- கூட்டமின்றி காத்துவாங்கியதால் ஜனநாயகன் பர்ஸ்ட் ஷோ ரத்து - தமிழ்நாட்டில் இப்படி ஒரு தியேட்டரா?
கூட்டமின்றி காத்துவாங்கியதால் ஜனநாயகன் பர்ஸ்ட் ஷோ ரத்து - தமிழ்நாட்டில் இப்படி ஒரு தியேட்டரா?
Jana Nayagan FDFS Cancelled : எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்க்க போதியளவு ஆட்கள் வராததால் முதல் காட்சியை தியேட்டர் நிர்வாகம் ரத்து செய்திருக்கிறது.

Jana Nayagan Movie Release
தமிழக முதல்வரும், நடிகருமான விஜய்யின் 'ஜனநாயகன்' படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. முதல் காட்சிக்காக, ரசிகர்கள் அதிகாலை முதலே தியேட்டர்கள் முன்பு குவிந்ததால், தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
அதிகாலை கொண்டாட்டங்கள், பாட்டுக்கு ஆட்டம், காகித மழை, பிரம்மாண்ட கட்-அவுட்கள், விசில் சத்தங்கள் என தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன. இது வெறும் ஒரு படத்தின் ரிலீஸ் மட்டுமல்ல, பல மாதங்களாக தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தங்களின் தளபதிக்கான கொண்டாட்டம் என்று பல ரசிகர்கள் கூறினர். தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
கொண்டாடிய ரசிகர்கள்
"தேர்தலுக்கு முன்னாடி இது தளபதி விஜய் படம்; இப்போ இது முதல்வர் விஜய் படம். எக்கச்சக்க போராட்டத்துக்கு அப்புறம் இந்த படம் வந்திருக்கிறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். தமிழ் சினிமாவுக்கும், தமிழக அரசியலுக்கும் இது ஒரு வரலாற்று நாள்," என ரசிகர் கூறினார். ஐஸ்வர்யா என்ற பெண் ரசிகை ஒருவர், படம் ரிலீஸானதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், "நாங்க ரொம்ப சூப்பர் எக்சைட்டடா இருக்கோம், அதே சமயம் ரொம்ப எமோஷனலாவும் இருக்கு. ஏன்னா இது அவருடைய கடைசி படம். ஸ்கிரீன் திறக்குறதுக்காக ரெண்டு மணி நேரமா காத்துட்டு இருக்கோம்," என்று கூறினார்.
களைகட்டிய திரையரங்குகள்
விஜய்க்கும் 'ஜன நாயகன்' படத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில், படத்தின் தலைப்பு அச்சிடப்பட்ட ஸ்பெஷல் டி-ஷர்ட்களை அணிந்தும் ரசிகர்கள் காணப்பட்டனர். "நான் சின்ன வயசுல இருந்தே தளபதி ரசிகன். எங்க அம்மாவும் அவரோட ரசிகர்தான்," என்று ஒரு ரசிகர் கூறினார். மறுபுறம், சென்னையிலும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அதிகாலை முதலே நகரின் தியேட்டர்களில் திருவிழா போன்ற சூழல் நிலவுகிறது. இந்த கொண்டாட்டங்களுக்கு சர்வதேச டச் கொடுக்கும் விதமாக, ஜப்பானைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் குழு ஒன்று, முதல் நாள் 'ஜன நாயகன்' படத்தைப் பார்க்க கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு வந்திருந்தனர்.
ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வெளியே நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெள்ளமெனப் பாய்ந்து வருகின்றன. நீண்ட வரிசைகளும், ஆரவாரமான கூட்டமும் படத்தின் பரவலான வரவேற்பைப் பிரதிபலித்தன. பலர் தங்கள் கார்கள் மற்றும் பைக்குகளில் 'ஜன நாயகன்' ஸ்டிக்கர்களை ஒட்டி வந்திருந்தனர்.
பர்ஸ்ட் ஷோ ரத்து
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் திருத்தணியில் உள்ள ஒரு திரையரங்கில் ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்ப்பதற்கு போதியளவு ஆட்கள் இல்லாததால் முதல் காட்சியை தியேட்டர் நிர்வாகம் ரத்து செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. திருத்தணியில் உள்ள கோல்டன் மினி சினிமா என்ற திரையரங்கின் ஒரு ஸ்கிரீனில் ஜனநாயகன் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. பல இடங்களில் ரசிகர்கள் பர்ஸ்ட் ஷோ பார்க்க டிக்கெட் கிடைக்காமல் திண்டாடி வந்த நிலையில், ஆள் இல்லாததால் பர்ஸ்ட் ஷோ ரத்து செய்யப்பட்டது பேசுபொருள் ஆகி உள்ளது.
ஹெச். வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' படத்தில் விஜய்யுடன் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். வி. செல்வகுமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

