- Home
- Cinema
- ஜன நாயகன் படக்குழுவினருக்கு மலேசியா போலீஸ் ஸ்ட்ரிக்ட் வார்னிங்: எதுக்கு? ஏன்? பரபரக்கும் பின்னணி!
ஜன நாயகன் படக்குழுவினருக்கு மலேசியா போலீஸ் ஸ்ட்ரிக்ட் வார்னிங்: எதுக்கு? ஏன்? பரபரக்கும் பின்னணி!
Malaysia Police Warning to Jana Nayagan Movie Team : விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கு மலேசியா போலீஸ் கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அது ஏன், என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Thalapathy Vijay Jana Nayagan Movie Audio Launch
விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படம் வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இது விஜய்யின் கடைசி படம். மேலும், முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தி விஜய்க்கான படமாகவே எடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய்க்கு மட்டும் ரூ.275 கோடி சம்பளம் என்று சொல்லப்படுகிறது. ஜன நாயகன் படத்தில் இடம் பெற்றுள்ள தளபதி கச்சேரி மற்றும் ஒரு பேரே வரலாறு ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களை கொண்டாட செய்தது.
ஜன நாயகன் படக்குழு மலேசியா போலீஸ் எச்சரிக்கை
இந்த நிலையில் தான் இன்னும் 3 நாட்களில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை சென்னையில் நடக்கவில்லை. வழக்கத்திற்கு மாறாக முதல் முறையாக விஜய் நடித்துள்ள ஒரு படம் வெளிநாட்டில் அதுவும் மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புகீத் ஜலில் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் மட்டுமின்றி அரசியல் வருகைக்கான பிரச்சார மேடையாக இந்த இசை வெளியீட்டு விழாவை பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
Jana Nayagan Audio Launch Controversy Malaysia
இந்த நிலையில் தான் மலேசியா போலீஸ் அதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கையாக பல விதமான கண்டிஷன்களை படக்குழுவினருக்கு போட்டுள்ளனர். அது என்ன என்றால், இந்த இசை வெளியீட்டு விழாவை ஜன நாயகன் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவாக மட்டுமே நடத்த வேண்டும். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சிக்கான மேடையாக பயன்படுத்தக் கூடாது. கட்சிக் கொடியை பயன்படுத்தவும் கூடாது. அரசியல் வசனங்கள், உரை என்று எதுவும் இடம் பெறக் கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வெறும் தகவல் மட்டுமே தவிர இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
Jana Nayagan Movie Updates Tamil
மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடக்க மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, தமிழகத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்தினால் ரசிகர்களின் கூட்டல் அலை மோதும். இதன் காரணமாக உயிர் சேதம் ஏற்படுவதற்கு கூடா வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் தான் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தவில்லை. இதே போன்று மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, ஆளும் கட்சியின் தாக்கம் இருக்க கூடும் என்பதால் தான் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
Malaysia Police Warning to Vijay Jana Nayagan Movie Crew
ஜன நாயகன் படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, கௌதம் மேனன், ரெபேகா மோனிகா ஜான், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபா பாஸ்கர், ரேவதி, நிழல்கள் ரவி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக பல காட்சிகளின் அடிப்படையில் தகவல் தெரிவிக்கின்றது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Jana Nayagan Movie Audio Launch Malaysia
இந்தப் படத்திற்கு போட்டியாக இப்போது பராசக்தி படம் வெளியாக இருக்கிறது. முதலில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது ஜனவரி 10ஆம் தேதியே படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஜன நாயகன் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். எப்படியும் இந்தப் படம் ரூ.1000 கோடி வசூல் குவித்து தமிழகத்தில் ரூ.1000 கோடி வசூல் குவித்த முதல் படம் என்ற சாதனையை ஜன நாயகன் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.