MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jana Nayagan: 'விஜய் நடிகர் மட்டுமில்ல, ஒரு எமோஷன்' - ரசிகர்களின் கண்களை குளமாக்கிய ஜனநாயகனின் அந்த 1 நிமிட காட்சி

Jana Nayagan: 'விஜய் நடிகர் மட்டுமில்ல, ஒரு எமோஷன்' - ரசிகர்களின் கண்களை குளமாக்கிய ஜனநாயகனின் அந்த 1 நிமிட காட்சி

Jana Nayagan End Credits : நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' சமீபத்தில் தியேட்டர்களில் வெளியானது. படத்தின் முடிவில் காட்டப்பட்ட ஒரு சிறப்பு வீடியோ, ரசிகர்களை பெரும் உணர்ச்சிப் பெருக்குக்கு ஆளாக்கியுள்ளது.

3 Min read
Author : Ganesh A
Published : Jul 24 2026, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jana Nayagan End Credits
Image Credit : X

Jana Nayagan End Credits

நீண்ட கால காத்திருப்பு, சட்டப் போராட்டங்கள், பல தடைகள் என எல்லாவற்றையும் தாண்டி நடிகர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' தியேட்டர்களில் வெளியாகி, தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஒரு காலத்தில் கேலி செய்தவர்களையே கைதட்ட வைத்து, ரசிகர்களாக மாற்றிய விஜய், இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். மக்களுக்காக சேவை செய்ய, அவர் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டார். ஒரு பக்கா விஜய் படத்துக்கான அத்தனை அம்சங்களோடும் வெளியான இந்தப் படம் தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்களையும் சோஷியல் மீடியா யூஸர்களையும் ஒருசேர அழவைத்த ஒரு வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Jana Nayagan Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸை பதம்பார்த்தாரா தளபதி? ஜனநாயகன் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
எமோஷனல் ஆன ரசிகர்கள்
Image Credit : KVN Productions

எமோஷனல் ஆன ரசிகர்கள்

'ஜனநாயகன்' படத்தின் எண்ட் கிரெடிட்டில் இந்த வீடியோ இடம்பெற்றுள்ளது. படம் பார்த்தவர்களுக்கு சர்ப்ரைஸாக கிடைத்த இந்த கிஃப்ட், ஒவ்வொருவர் மனதையும் ரொம்பவே பாதித்துள்ளது. தியேட்டரை விட்டு வெளியே வந்த ரசிகர்கள் பலர், கண்ணீருடன் காணப்பட்டனர். விஜய்யின் பழைய படங்களின் காட்சிகள், கடைசியாக 'ஜன நாயகன்' படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் அவர் பேசியது என அனைத்தும் இந்த வீடியோவில் கோர்க்கப்பட்டுள்ளன. 'He is not just an actor, he is an emotion' (அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு எமோஷன்) என்ற கேப்ஷனோடு பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோவின் நீளம் 1 நிமிடம் 8 விநாடிகள்.

While watching the ending of #JanaNayagan...
🥹 "அழுகை வர்ற மாதிரி இருக்கு..."

After walking out of the theatre...
🙂 "நாம அவ்வளவு லைட் ஹார்ட்டா ஆயிட்டோமா."

Then I opened social media...
💔 "இந்த மனுஷன் எல்லோரையும் அழ வச்சிருக்கார்."

What an era he ruled... ❤️

We all… pic.twitter.com/I7nKoiF2hy

— Tamil Arivu Kalanjiyam (@TamilArivu3116) July 23, 2026

Related Articles

Related image1
Jana Nayagan Full Review : விஜய்யின் கடைசி படம் ஒர்த்தா?... ஒர்த் இல்லையா? ஜனநாயகன் முழு விமர்சனம் இதோ
Related image2
Jana Nayagan Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸை பதம்பார்த்தாரா தளபதி? ஜனநாயகன் முதல் நாள் வசூல் எவ்வளவு?
34
குவியும் கமெண்ட்ஸ்
Image Credit : Asianet News

குவியும் கமெண்ட்ஸ்

விஜய் மீதான தங்களது அன்பை வெளிப்படுத்தி பலரும் இந்த பதிவுகளுக்குக் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். "இன்று பெரிய திரையில் என் குழந்தைப்பருவத்தின் ஒரு பகுதி முடிந்துவிட்டது. ஆனால் என் ஹீரோ என் இதயத்தை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டார். ஒவ்வொரு அணிலுக்கும் (விஜய் ரசிகர்) விஜய் ஒரு நடிகர் மட்டுமல்ல... அவர் ஒரு எமோஷன்", "பத்து வருஷம் கழிச்சு கேட்டாலும், என் ஃபேவரைட் நடிகர் விஜய் தான்", "ஒரு உண்மையான திறமைசாலி, ஒரு சிறந்த தலைவர், நம் அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்", "30 வருட நினைவுகள்... மனதைத் தொடும் ஒரு வீடியோவில். அழுகையை அடக்க முடியவில்லை", "ஒரு கலைஞராக அவரது பயணம் முடிந்திருக்கலாம், ஆனால் ஒரு முதலமைச்சராக, உண்மையான ஹீரோவாக அவர் தனது கடமைகளைத் தினமும் செய்து கொண்டிருக்கிறார்" என கமெண்ட்கள் நீள்கின்றன.

💔

When You realize it's not just the end of a film... it's the end of a 30-year cinematic journey.#JanaNayaganpic.twitter.com/5obPAVieO2

— PK UMAMAHESH (@PKBeastvijay) July 24, 2026

44
பொங்கலுக்கு ரிலீஸாகி இருந்தால்....
Image Credit : Asianet News

பொங்கலுக்கு ரிலீஸாகி இருந்தால்....

அதுமட்டுமின்றி ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்த பலரும், ஃபீல் பண்ணும் மற்றொரு விஷயம், இந்த படம் மட்டும் பொங்கலுக்கு வந்திருந்தால், விஜய்யின் அரசியலும் பெரும் பூஸ்டாக அமைந்திருக்கும். இந்த படம் அப்போ ரிலீஸ் ஆகியிருந்தால், விஜய் 150 சீட் கூட ஜெயித்திருப்பார் என்று ஃபீல் பண்ணுகிறார்கள். ஒரு சிலரோ, படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்து வைத்ததற்கு நன்றி சொல்லி வருகிறார்கள். படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருந்தால், இது வெறும் தளபதி படமாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய்யின் படமாக இது வெளிவந்துள்ளது. எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக முதலமைச்சர் அரியணையில் இருக்கும் போது ஒரு நடிகரின் படம் ரிலீஸ் ஆவது அது விஜய்யின் ஜனநாயகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Not just a title card…
A title the world has been waiting to witness.

மாண்புமிகு முதலமைச்சர்
திரு. C. Joseph Vijay

This title card will be remembered forever.#jananayagan#FansFortRohinipic.twitter.com/pf1OcJjt8M

— Rohini SilverScreens (@RohiniSilverScr) July 23, 2026

Insta pakkam poga mudila 🥹🥹#JanaNayaganpic.twitter.com/HsVqhjWPOp

— Pokkiri_Victor (@Pokkiri_Victor) July 23, 2026

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : மனோஜை மடக்கிய விஜயா... கனகாவின் செயலால் ஷாக் ஆன மீனா, முத்து!
Recommended image2
Jana Nayagan Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸை பதம்பார்த்தாரா தளபதி? ஜனநாயகன் முதல் நாள் வசூல் எவ்வளவு?
Recommended image3
Jana Nayagan: திருவிழாவாக மாறிய தியேட்டர்கள்! தியேட்டர்களில் குடியேறிய எம்எல்ஏக்கள், அமைச்சர்கள்.! வெறிச்சோடிய தலைமை செயலகம்.!
Related Stories
Recommended image1
Jana Nayagan Full Review : விஜய்யின் கடைசி படம் ஒர்த்தா?... ஒர்த் இல்லையா? ஜனநாயகன் முழு விமர்சனம் இதோ
Recommended image2
Jana Nayagan Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸை பதம்பார்த்தாரா தளபதி? ஜனநாயகன் முதல் நாள் வசூல் எவ்வளவு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved