MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jana Nayagan Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸை பதம்பார்த்தாரா தளபதி? ஜனநாயகன் முதல் நாள் வசூல் எவ்வளவு?

Jana Nayagan Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸை பதம்பார்த்தாரா தளபதி? ஜனநாயகன் முதல் நாள் வசூல் எவ்வளவு?

Jana Nayagan Day 1 Box Office Collection : தளபதி விஜய் ஹீரோவாக நடித்த கடைசி படமான ஜனநாயகன் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Jul 24 2026, 08:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jana Nayagan Box Office
Image Credit : X

Jana Nayagan Box Office

தளபதி விஜய், தமிழக முதல்வராவதற்கு முன்பு நடித்த கடைசிப் படம் 'ஜனநாயகன்'. பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய இந்தப் படம், சில சென்சார் பிரச்னைகளால் தள்ளிப்போனது. ஒருவழியாக, ஜூலை 23, வியாழக்கிழமை அன்று தியேட்டரில் ரிலீஸ் ஆனது. ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், சுனில் போன்ற பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

Jana Nayagan Full Review : விஜய்யின் கடைசி படம் ஒர்த்தா?... ஒர்த் இல்லையா? ஜனநாயகன் முழு விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜனநாயகன் கதை
Image Credit : Instagram

ஜனநாயகன் கதை

தளபதி வெற்றி கொண்டான் (விஜய்) ஒரு பவர்ஃபுல்லான போலீஸ் அதிகாரி. வில்லன்கள் அவரை ஒரு வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்புகிறார்கள். சிறையில், ஜெயிலர் (கௌதம் மேனன்) உடன் விஜய்க்கு நல்ல பழக்கம் ஏற்படுகிறது. விஜய்யை அவரது அம்மாவின் இறுதிச் சடங்குக்கு அழைத்துச் சென்றதால், ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். போகும்போது, அவர் விஜய்யை விடுவிக்க உதவுகிறார். விடுதலைக்குப் பிறகு, விஜய் அந்த ஜெயிலர் வீட்டுக்குச் செல்கிறார். அவருக்கு விஜி (மமிதா பைஜு) என்ற மகள் இருக்கிறாள். ஒரு சாலை விபத்தில் ஜெயிலர் இறந்துவிட, விஜி அனாதையாகிறாள். விஜயே அவளுக்குப் பாதுகாவலராக இருந்து, அவளை ராணுவ அதிகாரியாக்க முயற்சிக்கிறார்.

மறுபுறம், சர்வதேச கிரிமினல் ஜான் ஹெம்லர் (பாபி தியோல்), உள்ளூர் அரசியல்வாதியான ரோஜா ரங்கசாமி உதவியுடன் தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கத் திட்டமிடுகிறான். இந்த சதியை விஜய் எப்படி முறியடித்தார்? தன் வேலை போகக் காரணம் யார்? துணை ஆணையர் அம்ரிஷ் பூஜாரி, ஜான் ஹெம்லராக எப்படி மாறினான்? விஜி ஏன் ஒரு பொம்மையைப் பார்த்து பயப்படுகிறாள்? அவளது அம்மா எப்படி இறந்தார்? பொம்மைகளுக்கும் துப்பாக்கி கடத்தலுக்கும் என்ன தொடர்பு? இதில் விஜய் காட்டியுள்ள அரசியல் விஷயங்கள் என்னென்ன என்பதுதான் மீதிக்கதை.

Related Articles

Related image1
Jana Nayagan Full Review : விஜய்யின் கடைசி படம் ஒர்த்தா?... ஒர்த் இல்லையா? ஜனநாயகன் முழு விமர்சனம் இதோ
Related image2
Jana Nayagan: திருவிழாவாக மாறிய தியேட்டர்கள்! தியேட்டர்களில் குடியேறிய எம்எல்ஏக்கள், அமைச்சர்கள்.! வெறிச்சோடிய தலைமை செயலகம்.!
35
வரவேற்பை பெறும் ஜனநாயகன்
Image Credit : Asianet News

வரவேற்பை பெறும் ஜனநாயகன்

படம் பார்த்ததும் இது 'பகவந்த் கேசரி'யின் ரீமேக் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தப் படம் ஒரு கமர்ஷியல் ஆங்கிளில் சென்றது. ஆனால் 'ஜன நாயகன்' படத்திலோ, தமிழக அரசியலைப் பிரதிபலிக்கும் வகையில் எடுத்துள்ளனர். அரசியல்வாதிகளின் ஊழல்கள், அவர்களின் அசிங்கமான அரசியலை இதில் காட்டியிருக்கிறார்கள். அவர்களை விஜய் விமர்சிப்பதும், அவர்களின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது போன்ற காட்சிகளும் உள்ளன. ஒருவேளை, இதுதான் படம் சென்சார் ஆக தாமதமானதற்குக் காரணமாக இருக்கலாம். படத்தின் முதல் பாதி முழுவதும் பாலகிருஷ்ணாவின் படத்தையே நினைவுபடுத்துகிறது. ஆனால், பாபி தியோலின் பின்னணி புதிதாக இருக்கிறது. அவரை ஒரு சர்வதேச கடத்தல்காரராகக் காட்டியுள்ளனர். இது மட்டுமே புதிய விஷயம்.

45
ரசிகர்களுக்கு செம விருந்து
Image Credit : Asianet News

ரசிகர்களுக்கு செம விருந்து

விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு செம விருந்து. அவரின் ஸ்டைல், மேனரிசங்கள், எலிவேஷன்கள் என அனைத்தும் பட்டாசாக இருக்கிறது. அவை ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் வரவைக்கும். மமிதா பைஜுவுடனான எமோஷனல் காட்சிகள் நன்றாக உள்ளன. 'குட் டச், பேட் டச்' பற்றிய பகுதி சிறப்பாக உள்ளது. க்ளைமாக்ஸில் ரோபோக்கள், ட்ரோன்கள் என பெரிய சண்டைக் காட்சியை வைத்து அதகளம் செய்துள்ளனர். இரண்டாம் பாதியை விஜய் ரசிகர்களும், அவரது தவெக கட்சியினரும் கொண்டாடுவார்கள். இறுதியில், விஜய்யின் பழைய படங்களை நினைவூட்டும் வீடியோ, ரசிகர்களை எமோஷனல் ஆக்குகிறது. மொத்தத்தில், இது விஜய் ரசிகர்களுக்கான ஒரு கொண்டாட்டப் படம் என்பதில் சந்தேகமில்லை.

55
ஜனநாயகன் வசூல் நிலவரம்
Image Credit : Asianet News

ஜனநாயகன் வசூல் நிலவரம்

ஜனநாயகன் திரைப்படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகிவிட்டதால், இப்படத்திற்கு பெரியளவில் வசூல் இருக்காது என்கிற பேச்சு அடிபட்டது. ஆனால் அதையெல்லாம் அடிச்சு துவம்சம் செய்திருக்கிறார் தளபதி விஜய். இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.78 முதல் ரூ.80 கோடி வரை வசூலை வாரிசுருட்டி இருக்கும் என சாக்னில்ஸ் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் மட்டும் இப்படம் நேற்று ரூ.41 கோடி வசூலித்திருக்கிறது. 

இதில் ஜனநாயகன் படத்தின் தமிழ் வெர்ஷன் அதிகபட்சமாக ரூ.36.50 கோடியும், தெலுங்கு வெர்ஷன் ரூ.2.75 கோடியும், இந்தி வெர்ஷன் ரூ.1.75 கோடியும் வசூல் செய்துள்ளது. ரிலீசுக்கு முன்பே லீக்கான படத்துக்கு இது மிகப்பெரிய வசூலாக கருதப்படுகிறது. ஒரு வேளை லீக் ஆகாமல் இருந்திருந்தால் இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர். அடுத்தடுத்த நாட்களில் இப்படம் எப்படி வசூல் வேட்டை நடத்துகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan: திருவிழாவாக மாறிய தியேட்டர்கள்! தியேட்டர்களில் குடியேறிய எம்எல்ஏக்கள், அமைச்சர்கள்.! வெறிச்சோடிய தலைமை செயலகம்.!
Recommended image2
Now Playing
Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
Recommended image3
Now Playing
Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
Jana Nayagan Full Review : விஜய்யின் கடைசி படம் ஒர்த்தா?... ஒர்த் இல்லையா? ஜனநாயகன் முழு விமர்சனம் இதோ
Recommended image2
Jana Nayagan: திருவிழாவாக மாறிய தியேட்டர்கள்! தியேட்டர்களில் குடியேறிய எம்எல்ஏக்கள், அமைச்சர்கள்.! வெறிச்சோடிய தலைமை செயலகம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved