வசூலில் சரிவை சந்தித்த ‘அவதார் 2’... இந்தியா மற்றும் உலக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
அவதார் 2 படத்தின் வசூல் சரிவிற்கு வார நாட்கள் ஒரு காரணமாக இருந்தாலும், இப்படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்களும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட படைப்பான அவதார் திரைப்படம் கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகையே வியப்பில் ஆழ்த்தியது. பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை ஆடிய அப்படத்தின் 2-ம் பாகம் 13 ஆண்டு இடைவெளிக்கு பின் தற்போது வெளியாகி உள்ளது. அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்கிற பெயரில் கடந்த டிசம்பர் 16-ந் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.
சுமார் 160 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்டு உள்ள இப்படம், வெளியான முதல் மூன்று உலகளவில் ரூ.3500 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. ஆனால் அதன்பின்னர் இப்படத்தின் வசூல் சரிவை சந்தித்துள்ளது. வார நாட்கள் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், இப்படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்களும் படத்தின் வசூலை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... டான் இயக்குனருக்கு டாடா காட்டிவிட்டு... ‘தலைவர் 171’ பட வாய்ப்பை இளம் இயக்குனருக்கு கொடுத்த ரஜினிகாந்த்?
இந்தியாவைப் பொறுத்தவரை இப்படம் ரூ.200 கோடி வசூலை நெருங்கி வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் இப்படம் ரூ.16 கோடி வசூலித்து இருந்தது. முதல் 4 நாள் வசூலைக்காட்டிலும் இது மிகவும் குறைவு என கூறப்படுகிறது. இந்த வார இறுதியில் தான் இப்படத்தின் வசூல் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கும் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அவதார் 2 திரைப்படம் 350 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தின் புரமோஷனுக்காக மட்டும் 350 மில்லியன் டாலர் செலவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் 2 பில்லியன் டாலருக்கு மேல் வசூலித்தால் தான் இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார். தற்போது வரை உலகளவில் 500 மில்லியன் டாலர் வசூல் ஈட்டியுள்ள இப்படம், இனி வரும் வாரங்களில் இதே அளவு வசூலை ஈட்டினால் மட்டுமே 2 பில்லியன் டாலர் வசூலை எட்ட முடியுமாம். அவதார் 2 படம் இந்த வசூலை எட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... ரூ.400 கோடி பட்ஜெட்.. ரூ.150 கோடி சம்பளம்! தளபதி 68 குறித்து தீயாய் பரவும் தகவல் - இயக்கப்போவது யார் தெரியுமா?