- Home
- Cinema
- கவிழ்ந்து கிடைக்கும் வண்டிகள்.. மாஸ்ஸாக போஸ் கொடுத்த நெல்சன்! தெறிக்கவிடும் 'ஜெயிலர்' ஷூட்டிங் ஸ்பாட் க்ளிக்ஸ்
கவிழ்ந்து கிடைக்கும் வண்டிகள்.. மாஸ்ஸாக போஸ் கொடுத்த நெல்சன்! தெறிக்கவிடும் 'ஜெயிலர்' ஷூட்டிங் ஸ்பாட் க்ளிக்ஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். 'ஜெயிலர்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், ரஜினிகாந்த் முத்துவின் பாண்டியன் என்கிற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் உடன் கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரஜினிகாந்த் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன், முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா, நடிகர் வசந்த் ரவி, மலையாள நடிகர் விநாயக், யோகி பாபு மற்றும் கேமியோ ரோலில் மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து, மீண்டும் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதுவரை 75 சதவீதத்திற்கும் மேல் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது மீதமுள்ள காட்சிகளை படமாக்குவதில் படு குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஆக்ஷன் காட்சிகள் இன்று ராஜஸ்தான் பகுதியில் உள்ள ஜெய் சல்மார் என்னும் இடத்தில் படமாக்கப்பட்டு வந்த நிலையில், இது குறித்த சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேலும்ரஜினிகாந்துடன் அவருடைய ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுக்க முயற்சி செய்த... வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.