- Home
- Cinema
- பீஸ்ட்டை விட கம்மி வசூல்... தமிழ்நாட்டில் ஜெயிலருக்கு இப்படி ஒரு நிலைமையா? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
பீஸ்ட்டை விட கம்மி வசூல்... தமிழ்நாட்டில் ஜெயிலருக்கு இப்படி ஒரு நிலைமையா? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம், முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Jailer
ரஜினிகாந்தின் கம்பேக் திரைப்படமாக வெளியாகி உள்ளது ஜெயிலர். நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஓய்வுபெற்ற சிறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினி. சிலைக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் சுமார் 900 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
Jailer
இதனால் தமிழகமே நேற்று திருவிழாக் கோலமாக இருந்தது. ஜெயிலர் படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் ரஜினி உள்பட ஒட்டுமொத்த ஜெயிலர் படக்குழுவும் செம்ம குஷியில் உள்ளனர். வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் முதலில் ரசிகர்கள் தெரிந்துகொள்ள விரும்புவது விமர்சனம், அதற்கு அடுத்தபடியாக அவர்கள் ஆவலோடு காத்திருப்பது, அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்ன என்பது தான்.
இதையும் படியுங்கள்... Jailer: 'வாரிசு' படத்தின் மொத்த வசூலை... ஒரே நாளில் பீட் செய்த 'ஜெயிலர்'! இது தான் சூப்பர் ஸ்டார் பவர்!
அதன்படி ஜெயிலர் படமும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் முதல் நாளிலேயே விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு போன்ற படங்களின் லைஃப் டைம் கலெக்ஷனை தட்டித்தூக்கி மாஸ் காட்டி உள்ளது. அமெரிக்காவில் ரஜினி பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக இருந்தாலும், தமிழ்நாட்டில் அவரால் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை. குறிப்பாக விஜய் - நெல்சன் கூட்டணியில் வெளிவந்த பீஸ்ட் படம் தமிழகத்தில் முதல் நாள் வசூலித்ததை விட ஜெயிலருக்கு கம்மி வசூலே கிடைத்துள்ளது.
ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ.29 கோடி வசூலித்து உள்ளதாம். ரஜினி நடிப்பில் இதற்கு முன் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தின் வசூலை விட இது குறைவு தான். அண்ணாத்த திரைப்படம் முதல் நாளில் ரூ.34 கோடி வசூலித்து இருந்தது. அதேபோல் அஜித்தின் வலிமை 36 கோடியுடனும், விஜய்யின் பீஸ்ட் 38 கோடி உடனும் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் சாதனைக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். ஜெயிலர் படம் முதல் நாளில் உலகளவில் ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Jailer Box Office: இலங்கையில் முதல் நாளே வசூலில் மாஸ் காட்டிய 'ஜெயிலர்'..! எத்தனை கோடி தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.