மயிலு பெத்த மகளை தமிழுக்கு கொண்டு வரும் பா ரஞ்சித்! ஆனால் ஒரு ட்விஸ்ட்?
பா ரஞ்சித், நடிகை ஸ்ரீதேவியின் மகளை தமிழில் அறிமுகப்படுத்த உள்ளார். தற்போது இதுகுறித்த தகவல் தான் வெளியாகி உள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர், 'தடக்' என்ற படத்தின் மூலமாக சினிமாவில் கால் பதித்தார். அம்மாவின் வழியில் தானும் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்குள் வந்த ஜான்வி கபூருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியவே வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், கடந்த ஆண்டு ஜூனியர் NTR நடிப்பில் வெளியான 'தேவாரா பார்ட் 1' படம் மூலம் தென்னிந்திய திரையுலகில் கால் பதித்தார்.
ஜான்வி கபூர் கைவசம் உள்ள படங்கள்:
நேரடியாக தெலுங்கு மொழியிலும், பான் இந்தியா அளவில் மற்ற மொழிகளிலும் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டது. மேலும் தற்போது ராம் சரணுக்கு ஜோடியாக அவரின் 16-ஆவது படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டும் இன்றி Sunny Sanskari Ki Tulsi Kumari மற்றும் Param Sundari ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கணவர், 3 குழந்தைகளுடன் திருப்பதியில் செட்டிலாக ஆசை: திருமண ஆசையை வெளிப்படுத்திய ஜான்வி கபூர்!
வெப் சீரிஸில் நடிக்க ஜான்வி ஒப்பந்தம்
ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் மட்டும் அடுத்தடுத்து நடித்து வரும் ஜான்வி கபூர்... தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் , அதனை அவர் ஏற்க மறுப்பதாகவும் சொல்லப்படுது. அப்படியிருக்கும் போது இப்போது ஒரு வெப் சிரீஸீல் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். விமலின் களவாணி படத்தை இயக்கிய இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் இயக்குநரும், தயாரிப்பாளருமான பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் இந்த வெப் சீரிஸில் நடிக்க ஜான்வி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
பா ரஞ்சித் தயாரிப்பில் ஜான்வி கபூர்
இது முழுக்க முழுக்க நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரிக்கப்படுகிறது. தற்போது முதல் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெப் சீரிஸின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இதில் நடிக்க அவருக்கு எவ்வளவு சம்பளம் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதுவரையில் தமிழ் சினிமாவிற்கு நோ சொல்லி வந்த ஜான்வி கபூர் வெப் சீரிஸீல் நடிக்க ஒகே சொன்னது தான் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக பார்க்கப்படுகிறது.
காஃபி குடிச்சே வெயிட் லாஸ் பண்ணிய ஜான்வி கபூர்; அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?