பிக் பாஸ் வரலாற்றில் புது சாதனை படைத்த ஜாக்குலின்
Bigg boss Jacquline : பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி வரலாற்றில் இதுவரை அதிக முறை நாமினேட் ஆன போட்டியாளர் என்கிற சாதனையை ஜாக்குலின் படைத்துள்ளார்.
Jacquline
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு மாதங்கள் மட்டுமே எஞ்சி உள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற எவிக்ஷனில் ரஞ்சித் வெளியேற்றப்பட்டதால், தற்போது முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரஞ்சித், ராணவ், ஜெஃப்ரி, தீபக், அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், மஞ்சரி, செளந்தர்யா ஆகிய 12 பேர் எஞ்சி உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார்.
Bigg Boss Jacquline
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் எவிக்ஷன் நடைபெறும். இதற்காக வாரத்தின் முதல் நாளில் நாமினேஷன் நடக்கும். அதில் போட்டியாளர்கள் தாங்கள் வெளியேற்ற விரும்பும் இரண்டு போட்டியாளர்களின் பெயரை முன் மொழிவார்கள். அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஃப்ரீ பாஸ் வைத்துள்ள ரயான் தவிர அனைத்து போட்டியாளர்களும் இந்த வார எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... டைட்டில் ஜெயிச்சா கூட இவ்ளோ கிடைக்காது! பிக் பாஸ் ரஞ்சித்தின் சம்பளம் இவ்வளவா?
Bigg Boss Jacquline Record
இதன்மூலம் பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளரான ஜாக்குலின் புது சாதனை ஒன்றை படைத்துள்ளார். பிக் பாஸ் வரலாற்றில் தொடர்ச்சியாக 12 முறை நாமினேட் ஆன போட்டியாளர் என்கிற சாதனையை ஜாக்குலின் படைத்திருக்கிறார். இதற்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பாவனி ரெட்டி இதேபோன்று தொடர்ச்சியாக 12 வாரம் நாமினேட் ஆகி இருந்தார். அந்த சாதனையை தற்போது ஜாக்குலின் சமன் செய்திருக்கிறார். அடுத்த வாரம் நாமினேட் ஆனால் தனி வரலாறு படைத்துவிடுவார் ஜாக்குலின்.
Jacquline Create Record in Bigg Boss
அதேபோல் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக இந்தி பிக்பாஸில் ரூபினா திலக் என்பவர் அதன் 14-வது சீசனில் கலந்துகொண்டபோது ஒட்டுமொத்தமாக 15 வாரமும் நாமினேட் ஆகினாராம். அந்த சாதனையையும் ஜாக்குலின் முறியடிக்க வாய்ப்புள்ளது. இதில் சோகம் என்னவென்றால் ஜாக்குலின் இதுவரை ஒருமுறை கூட கேப்டன் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... எதிர்பாராத போட்டியாளரை வெளியேற்றி ட்விஸ்ட் கொடுத்த பிக்பாஸ்! கண்ணீரோடு வெளியே சென்றது யார் தெரியுமா?