பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இந்த பிரபலமா? முதல் முறையாக வெளியான புகைப்படம்..!
பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இந்த பிரபலமா? முதல் முறையாக வெளியான புகைப்படம்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த நான்கு சீசன்களாக தொடர்ந்து பார்த்து வரும், ரசிகர்கள் அனைவருக்குமே, இதில் கணீர் கணீர் என ஒலிக்கும் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பதை தெரிந்து கொள்வதில் அலாதி ஆர்வம்.
தற்போது வரை, இந்த குரலுக்கு சொந்தக்காரர்கள் என, அமீத் பார்கவ், டப்பிங் கலைஞர் கோபி என பலரது பெயர் அடிபட்டது.
ஆனால் அமித் பார்கவ், இதனை மறுத்ததோடு... கன்னடத்தில் பிக்பாஸ் குரலுக்கு மட்டுமே தான் வாய்ஸ் கொடுத்துள்ள உண்மையையும் போட்டுடைத்தார்.
இதை தொடர்ந்து தற்போது பிரபல குரல் வல்லுனரும், பாலிவுட் திரையுலகில் ஒரு சில படங்களில் நடித்துள்ள சச்சிதானந்தம் என்பவர் தான் கடந்த நான்கு சீசனாக பிக்பாஸ்சுக்கு குரல் கொடுத்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சச்சிதானந்தத்தின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
மேலும் சச்சிதானந்தத்தின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இளம் வயதிலேயே அருமையான குரல் வளம் கொண்ட இவரை, பிக்பாஸ் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.