பீஸ்ட் படத்தை தான் திரையிட வேண்டும்... தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறதா? - பின்னணி என்ன?
Beast Vs KGF 2 : பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 படத்தை திரையிட ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி கே.ஜி.எஃப் 2 மற்றும் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. இந்த இரண்டு படங்களுமே பான் இந்தியா படங்களாக வெளியாகின. குறிப்பாக கே.ஜி.எஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டன.
பிற மாநிலங்களில் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அதிகளவில் திரையிடப்பட்டாலும், தமிழ்நாட்டில் விஜய் நடித்த பீஸ்ட் படத்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இப்படம் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டன. அதே வேளையில் இதற்கு போட்டியாக வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 300 திரைகளில் மட்டுமே திரையிடப்பட்டன.
பீஸ்ட் படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் இப்படத்தைக் காண மக்கள் ஆரவம்காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 படத்தை திரையிட ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பீஸ்ட் படத்தை தான் திரையிட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, பீஸ்ட் படத்தை திரையிட திரையரங்குகளுக்கு போடப்பட்டுள்ள ஒப்பந்தம் ஒருவாரம் வரை செல்லும் என்றும், அதன்பிறகே அடுத்தகட்ட மாற்றங்கள் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் அடுத்தவாரம் முதல் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அதிக இடங்களில் திரையிடப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Thalaivar 169 : பீஸ்ட்டால் நெல்சனுக்கு வந்த சோதனை... கைமாறும் ‘தலைவர் 169’ படம்! - அட்லீக்கு அடித்த ஜாக்பாட்?