தல கொடுத்த கொரோனா நிவாரணம் இத்தனை லட்சம் தானா?... உண்மையை உடைத்த அஜித் மேனேஜர்...!
கொரோனா தொற்றால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா நிவாரண நிதியாக உதவ வேண்டும் என முதல்வர் அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்த நிலையில், தல அஜித் 2 . 5 கோடி வழங்கியதாக வெளியான தகவலை தொடர்ந்து, அஜித் கொடுத்த உண்மையான தொகை குறித்த தகவலை அவரது மேலாளர் வெளியிட்டுள்ளார்.
சுமார் 10 வருடங்களுக்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ள திமுக கட்சி, தற்போது நிலவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் கொரோனாவால் தமிழகம் மற்றும் புதுவையில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் கூடி கொண்டே செல்கிறது. முதல் அலையை விட, இரண்டாவது அலையில் இறப்பு எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளதால், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக, மே 10 ஆம் தேதி முதல், மே 24 ஆம் தேதி வரை, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்து உபகரணங்களை வாங்க, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இவரது கோரிக்கையை ஏற்று பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில்... கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நடிகர் சிவகுமாரின் வாரிசுகள், கொரோனா பணிக்காக முதல் ஆளாக வந்து உதவினார்கள். முதலமைச்சரை நேரில் சந்தித்து, ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.
இவர்களை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அஜித், ரூ.2 . 5 கோடி முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கியதாக, தமிழக அரசு தரப்பில் இருந்து வெளியான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழக அரசியில் செய்தி குறிப்பில் தவறாக அச்சிடப்பட்டு விட்டதாகவும், உண்மையில் அஜித் 25 லட்சம் மட்டுமே வங்கி பரிவர்த்தனை மூலம், நேரடியாக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தன்னுடைய செய்தி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.