- Home
- Cinema
- Thalapathy 66 Update : விஜய்யின் ‘தளபதி 66’ அரசியல் படமா? - அனல் பறக்கும் ஹாட் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்
Thalapathy 66 Update : விஜய்யின் ‘தளபதி 66’ அரசியல் படமா? - அனல் பறக்கும் ஹாட் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்
தளபதி 66 அரசியல் கதையம்சம் கொண்ட படமாக தயாராக உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிபல்லி சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் (Beast) படம் தயாராகி உள்ளது. நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் நடிக்க அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா (Thozha) படத்தை இயக்கிவர் ஆவார். மேலும் இப்படத்தை டோலிவுட்டை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படம் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
தளபதி 66 (Thalapathy 66) படத்தின் படப்பிடிப்பை வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ளனர். திட்டமிட்டபடி இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தால் வருகிற தீபாவளி பண்டிகைக்கு படம் ரிலீசாகும் என்றும், ஒருவேளை கொரோனா காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டால் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தார்.
மேலும் இது அரசியல் கதையம்சம் கொண்ட படமாக தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வந்த நிலையில், இப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிபல்லி (Vamshi Paidipally) சமீபத்திய பேட்டியில் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனது முந்தைய படங்களான தோழா மற்றும் மஹரிசி போல் தளபதி 66 படமும் எமோஷனல் திரைப்படமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
தளபதி 66 (Thalapathy 66) படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு தமன் (Thaman) இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உறுதியானால் விஜய்யுடன் அவர் கூட்டணி அமைக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Naaisekar returns movie : நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் காமெடி கேங் உடன் வடிவேலு.... வைரலாகும் போட்டோ