கைகூடாத காதல்! பயில்வான் ரங்கநாதனை துரத்தி... துரத்தி காதலித்த 3 நடிகைகள்..! அதில் ஒருவர் இவரா?
தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராகவும், பத்திரிகையாளராகவும் அறியப்படும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்.. தன்னை மூன்று நடிகைகள் துரத்தி துரத்தி காதலித்ததாக கூறியுள்ள தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திரையுலகம் என்றாலே, எப்போதும் சண்டை சச்சரவுகளுக்கு குறைவிருக்காது. இது போன்ற சண்டை சச்சரவு மற்றும் பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் குறித்து, தன்னுடைய நிகழ்ச்சியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் பயில்வான் ரங்கநாதன்.
இவர் இப்படி பேசும் பேச்சுகளுக்கு, பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலர் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தாலும், அடங்காத பயில்வான் ஒவ்வொரு முறையும் திரையுலகில் மறைக்கப்பட்ட விஷயங்களை கூறுவதாக, மற்றவர்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் காதல் மற்றும் அந்தரங்க வாழ்க்கை பற்றி கூறி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இது போன்ற பேச்சால் பல முறை... சில சிக்கல்களில் சிக்கியுள்ளார் பயில்வான். குறிப்பாக ரேகா நாயர் போன்ற நடிகைகள் பயில்வான் ரங்கநாதன் நடை பயிற்சி மேற்கொண்டிருக்கும் போது, நேரடியாக சண்டைக்கு பாய்ந்து... அவரை நடு ரோட்டில் வைத்து புரட்டியெடுத்த கதை எல்லாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இவர் பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலா, தற்போது கலந்துகொண்டு பேட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி ஒன்றில் வசமாக சிக்கி 'பல்லு புடுங்கிய பாம்பு போல்' பதில் சொல்ல முடியாமல் திணறி அமர்ந்திருந்தது பலரையும் திகைக்க வைத்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தன்னை துரத்தி துரத்தி காதலித்த சில நடிகைகள் குறித்து பயில்வான் ரங்கநாதன் பகிர்த்துள்ள தகவல் தான் செம்ம ஹைலைட்.
விரைவில் திருமணம்... அமீருடன் காதலர் தினத்தை ரொமான்டிக்காக கொண்டாடி அதகளம் செய்யும் பாவனி! போட்டோஸ்!
அதே போல், தன்னை காதலித்த நடிகைகளின் காதலை ஏற்காததற்கு சில காரணம் உண்டு எனவும், தன்னுடைய குடும்பம் மிகவும் ஆச்சாரமானது எனவே... காதல் கத்தரிக்காய் போன்ற விஷயங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், என்பதால் தனக்கு வந்த காதல் விண்ணப்பங்களை நிராகரித்து விட்டதாகவும் கூறியுள்ளார். அதே நேரம் தன்னை காதலித்த நடிகைகள் யார் யார் என்பதை கூற மறுத்துவிட்ட பயில்வான் ரங்கநாதன்.
ஒரே ஒரு நடிகை குறித்து மட்டும் ஹிண்ட் கொடுத்துள்ளார் அவர், நடிகர் கவுண்டமணியுடன் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ள நடிகை ஒருவரும் தன்னை துரத்தி துரத்தி காதலித்ததாக தெரிவித்துள்ளார். இவர் கூறியது பிரபல நடிகை ஷர்மிலியை தான் என சிலர் கமெண்ட் செய்து வந்தாலும், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
கேரளாவை சேர்ந்த ஷர்மிலி ஒரு சில படங்களில் கவுண்டமணியுடன் நடித்துள்ளார். மேலும் இவருடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை சரியாக அமையாததாலும், தீவிர உடல்நல பிரச்னையாலும் அவதிப்பட்ட இவர், சமீப காலமாக எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் கிடைக்காததால், மிகவும் சோகமான நிலையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பல்வான் ரங்கநாதனை காதலித்த மற்ற இரு நடிகைகள் யாராக இருக்கும் என்பது குறித்தும்? ரசிகர்கள் கமெண்ட் போட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.